திங்கள், 12 நவம்பர், 2012

தீபாவளி வேண்டும்!!




மேல் மட்ட மக்கள்

வருடம் முழுதும் செய்த பாவத்தை
ஒருநாள் வந்திடும் கங்கையில்
குளித்துக் கழுவி விட்டு
சூரியோதயம் காணாத கண்களால்
சூரிய நாராயணுக்காகப் படைத்துப்
பணம் இருக்கும் பகட்டைப்
பலகாரத்தில் காண்பித்து
வயிரார உண்ண முடியாமல்
வந்திருக்கும் நோயிக்குப் பயந்துப்
பிச்சையிட வேண்டுமானாலும்
பிறரைக் கூட்டிக் காண்பித்துப்
பகவானைக் கண்டிடப்
பகட்டு நகையுடன்
மிடுக்காகச் சென்றிடுவார்
மிகையானவர்க்குத் தீபாவளி!!

நடுத்தர மக்கள்

கௌரவம் பார்த்துக்
குடும்பம் நடத்திக்
கரன்சியைக் கடவுளாக்கிக்
காய்ந்த வயிற்றைத் தடவி
பக்கத்து வீட்டுக்காரனை விட
பகட்டாகக் காட்டிக் கொண்டு
வருடத்தில் ஒருமுறை
வந்திடும் போனசுப் பணத்திற்கு
ஓராயிரம் பொருள் வாங்கக்
கற்பனைப் பண்ணிக் கொண்டு
ஒன்றும் வாங்க முடியாத
விலைவாசி உயர்வைக் கண்டு
ஆசையாக காத்திருக்கும் பிள்ளைகளுக்கு
அடுத்த வீட்டு பலகாரத்தைக் கூட
பெருமையுடன் இன்னொரு வீட்டிற்குக்
கொடுத்தனுப்பி விட்டு
யார் கொளுத்தினாலும்
பட்டாசு கரியாகும் தானென்ற
உயர்வானத் தத்துவத்துடன்
அடுத்தவர் வெடியைக் காண்பித்து
ஆறுதல் அடைந்து
அடுத்தத் தீபாவளியைச்
சிறப்பாகக் கொண்டாடலாம் என்ற
சிந்தனையுடன் போகும் தீபாவளி!!!

கீழ் மட்ட மக்கள்

வருடத்தில் ஒருநாளாவது
புத்தாடை அணிந்து கொண்டு
புதுப்படம் எதுவென்று
கையிருப்பு அனைத்தையும்
கரைத்துக் கடன்வாங்கிக்
காய்ச்சியதைக் குடித்துவிட்டு
கறிமீன் ருசிப்பார்த்து
“நரகாசூரனா...? யார் அவன்?
அவனை அழிக்க
அவதாரம் எதற்கு?
என்னெதிரில் வரச்சொல் அவனை..
ரெண்டுல ஒன்னு பாக்குறேன்...
இன்னா தைரியம் இருந்தா
மக்கள கொடுமப் படுத்தியிருப்பான்.
...........! அவன் யாரவன்
ஏய் நரகாசுரா... என்னெதுருல வாடா...“
கட்டியிருந்த புது வேட்டி
கழண்டு விழுவதையும்
இலட்சியப் படுத்தாமல்...
இவனுக்காகவே
தீபாவளி என்று ஒருநாள்
திருநாளாய் வரவே வேண்டும்!!!!!

நட்புறவுகளுக்கு வணக்கம்.
   அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
நான் கடந்த இரண்டு வாரங்களாக தாயகம் சென்றிருந்ததால் அதிகமாக வலைப்பக்கம் வர முடியாமல் போனது. இருப்பினும் நீங்கள் அனைவரும் என் வலைக்குள் வந்து படித்திட்டுக் கருத்திட்டும் இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

அன்புடன்
அருணா செல்வம்.

31 கருத்துகள்:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தோழி !.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      உங்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

      நீக்கு
  2. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நண்பரே.

      உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  3. வித்தியாசமாகச் சொன்னவிதம் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சொந்தமே.

      உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  5. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அன்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பாஸ்.

      உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  7. மூன்று தட்டு மக்களின் தீபாவளியையும் பாடலில் சொல்லிவிட்டீர்கள்.

    ஆடம்பரம் இன்றி இல்லாதோருக்கு உதவும் நற்பண்பை வளர்த்துக்கொண்டு வாழ முயற்சிப்போம்.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  8. தீபாவளி குறித்த உங்கள் பார்வை மிகவும் சரி தோழி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  9. அருமை! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  10. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
    மிக்க நன்றி மனசாட்சி முத்தரசு.

    உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. தங்களுக்கும்...தங்களின் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    check this link!

    http://www.flashscrap.com/data/tools/diwali-greetings.swf?mes=%0D%0D%0DWISH+U+A+VERY+WONDERFULL+%0DD

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி வசு.

      நான் நீங்கள் கொடுத்தப் பட்டாசைக் கொளுத்தி தீபாவளி கொண்டாடி விட்டேன்.
      மிக்க நன்றி.
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
      என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் வசு.

      நீக்கு
  12. சில நாட்களாக வலைப பக்கம் காணவில்லையே என்று நினைத்தேன்.இந்தியாவிற்கு வந்திருந்தீர்களா!மகிழ்ச்சி.
    மூன்று கோணத்தில் தீபாவளியைப் பார்த்த பார்வை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் முரளிதரன் ஐயா.
      இரண்டு வாரங்கள் விடுமுறை கிடைத்தது.
      போய் வந்துவிட்டேன். ஆனால்...
      தீபாவளிக்கு முன்னே வந்தது தான் கொஞ்சம் கவலை.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  13. தீபாவளி வாழ்த்துக்கள் சகோ உங்க பதிவுகள் என் டேஸ் போர்டிற்கு வரவே இல்லையே.. வாழ்த்துக்கள் சகோ.. சந்தோசமா கொண்டாடி இருப்பிங்க வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா... இன்று அதிக பதிவுகள் வந்துள்ளதால் முன்னாலேயே கீழே போய்விட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

      வாழ்த்திற்கு மிக்க நன்றி ஹாரி.

      நீக்கு
  14. என்னமா ஒரு வீரவசனம் நரகாசுரனுக்கு.....அவன் சாட்டில எல்லாரும் ஒன்றுகூடிக் கொண்டாடுறோமே....சந்தோஷம்தானே.அருண்...உங்களுக்கு அன்பான தீபத் திருநாள் வாழ்த்து !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இனிய தோழி ஹேமா...
      புது வீடு பழகி விட்டதா...? வாழ்த்துக்கள்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  15. மூன்று தட்டு தீபாவளிப்பார்வை அருமை...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரெவெரி சார்.

      நீக்கு
  16. உங்கள் கவிதையில் கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பும் கருப்பும் தலைகாட்டுகிறதே !!! பாரதி முதல் சல்மாவரையில் சமுதாய அவலங்களை சாடும் கவிஞர்களே, பாமரர்கள் வரையில் சென்று அடைந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்... தீபாவளிக்கு அல்ல, உங்களுள் ஒளிந்திருக்கும் தீப்பிழப்பிற்கு...

    இப்படிக்கு

    அட நான் தாங்க!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.

      (எழுத்திலே சிலரின் அடையாளம் தெரிந்துவிடும். சரி சரி... கண்டுபிடித்துவிட்டேன்... நீங்கள் அவர் தானே...?)

      நீக்கு