மாலை மஞ்சளில் சூரியன் மயங்கும்
வேலை... மன்மத அம்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு பாச பிணைப்பை இச்சென்மத்தில்
மாற்றவே முடியாத தங்கையின் வீட்டிற்குச் சென்றேன்.
தாவிக்குதித்து ஓடிவந்தாள் கால் முளைத்தத்
தாமரையாய்த் தங்கையின் மகள்.
ஆசையுடன் கட்டிக்கொண்டு முத்தமிட்டாள்.
இரண்டு மாதம் இந்தியாவில் தான்
கண்டதையெல்லாம் கண்விரித்துக் கூறினாள்.
கடைசியில் கேட்டாள்.. ” நீங்கள் கவிதையெல்லாம் எழுதுவீங்களே...
நான் கேட்பதற்கு பதில் சொல்லுவீங்களா...?” என்று
எனக்குக் கொஞ்சம் தயக்கம் தான்... நமக்கு
எதுவும் முழுமையாகத் தெரியாதே... ஏடாகூடமாக ஏதாவது கேட்டுவிட்டால்....
இருந்தாலும் இதை ஐந்துவயது குழந்தையிடம்
ஒப்புக்கொள்ள முடியாது என்று மனம் மறுத்ததால்... ”சரி கேளும்மா... பதில் தெரிந்தால் சொல்கிறேன்” என்றேன்.
இவளும் கேட்டாள்
“இந்தியாவில் சுவர் இருக்குது இல்லையா.... அதுல
எறும்பு வரிசை வரிசையாக போகும் பார்த்திருக்கிறீர்களா...?“ என்றாள்.
இந்தியாவில் பிறந்துவிட்டு இதைப்
பார்க்காமலா... ”ஆமாம் போகும்.
அதற்கென்ன..?“ என்றேன்.
”அப்படி வரிசையாக போகும் பொழுது இடையில் நம் கை விரலால் ஒரு
கோடு போட்டால் அந்த எறும்புகள் தடுமாறுதே... ஏன் தெரியுமா....?“ என்றாள்.
அடடா... அருமையாக குழந்தை யோசிக்கிறதேன்னு
நினைத்து மனத்திற்குள் பெருமிதத்தோடு சொன்னேன். “எறும்புக்குக் கண்ணு தெரியாது.
அது வாசனை முகரும் உணர்ச்சியைக் கொண்டு தன் இனத்தோடு ஒன்றாக சேர்ந்து
செல்வதற்காகத் தான் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்கிறது. அப்படிச் செல்லும் பொழுது நீ உன் கைவிரலால் அங்கே கோடு
போட்டால் உன் கைவிரல் வாசனை அங்கே ஒட்டிக்கொள்ளும். அந்த வாசனை அதற்கு புதிது
என்பதால் வழி புரியாமல் தடுமாறும்.“ என்றேன்.
அவளும் சற்று நேரம் யோசித்தாள். பிறகு
சொன்னாள்... “ஐயோ நீங்க
புரியாமல் சொல்லுறீங்க... எறும்புக்குச் சின்ன இடை. அந்த இடையில உங்க கைவிரலால
கோடு போடவே முடியாதே....” என்று
சொல்லிச் சிரித்தாள்.
நானும் என் அறியாமையை நினைத்துச்
சிரித்துக் கொண்டேன். நாம், எனது, என்எண்ணம் என்பதை மட்டும் நினைத்திருந்தால்
அடுத்தவரின் எண்ண உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாது.
உதாரணமாக..
இப்பொழுதெல்லாம்
எழுத்தாளர்கள் கவிஞர்கள் புதுப்புதுக் கற்பனைகளுடன் அருமையாக எழுதுகிறார்கள். அவர்கள்
எழுதியதை நாம் ஒன்று நினைத்தால் அவர்கள் வேறு எண்ணதில் எழுதியதாகச் சொல்கிறார்கள்.
அது தான் உண்மை. நாம் நினைத்தது பிரம்மையாக இருந்தாலும் அவர்கள் சொன்னது
பிரமாண்டமாக உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும்.
அது இது, அவள் இவள் என்றெல்லாம் எழுதினாலும்
நமக்கு “எது எவள்” என்பது முதலில்
புரியவில்லை. என்றாலும் இப்பொழுது நன்றாகப் புரிந்து போனது.
அவர்கள் முதுகவிஞர்கள் என்பதும்,
நாம் புது(சிறு) கவிஞர் என்பதும்! நன்றி.
இப்பொழுது...
கவிமனத்தில் ”போகப் போகத் தெரியும்” பாகம் - 13
எறும்ப விட குழந்தை கடிச்சிடுச்சு..
பதிலளிநீக்குஆமாங்க கோவி சார்....
நீக்குஇந்த மாதிரி நிறைய கடி வாங்கியிருக்கிறேன்.
அதுவும் சுவையான கதைதான்... இல்லையில்லை கடிதான்.
நன்றிங்க.
////அவர்கள் எழுதியதை நாம் ஒன்று நினைத்தால் அவர்கள் வேறு எண்ணதில் எழுதியதாகச் சொல்கிறார்கள். அது தான் உண்மை.///
பதிலளிநீக்குcent percent true....
உண்மைக்கு எப்பவுமே அதிக மதிப்புதாங்க அகிலா.
நீக்குநன்றிங்க.
///அவர்கள் எழுதியதை நாம் ஒன்று நினைத்தால் அவர்கள் வேறு எண்ணதில் எழுதியதாகச் சொல்கிறார்கள். அது தான் உண்மை.///
பதிலளிநீக்குtruly said
மீண்டும் நன்றிங்க.
நீக்குஅவர்கள் முதுகவிஞர்கள் என்பதும்,
பதிலளிநீக்குநாம் புது(சிறு) கவிஞர் என்பதும்! // நல்ல தெளிவுதான்.
நன்றிங்க தமிழ்த்தாகம்.
நீக்கு(தமிழைப் பேசினாலே தாகம் தீர்ந்திடும் இல்லையா...?)
கருத்துடன் மிக மிக இயல்பாய் இணைந்த
பதிலளிநீக்குகவித்துவமான கதை மனம் கவர்ந்தது..
ம்னம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றிங்க ரமணி ஐயா.
நீக்குஅது இது எதுன்னு புரியாம முழிச்சிட்டிருக்கற என்னைவிட அவர்கள் முதுகவிஞர்கள், நாம் புதுக்கவிஞர்னு புரிஞ்சுட்டிருக்கற நீங்கள் மேல். (பின்ன என்ன நான் பீமேலான்னு கடிக்காதீங்க) குழந்தை குறும்பாய் மடக்கியதைப் படித்து மகிழ்ந்தேன். அருமையா எழுதறீங்க. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குகுழப்பத்தில் விழுந்து மேலும் குழம்பாமல் நாமே கொஞ்சம் கொஞ்சமாகத் தெளியலாம் இல்லைங்களா கணேஷ் சார்.
நீக்குநான் தெரிந்து தெளிந்து கொண்டது சரிதான் என்று நினைக்கிறேன்.
உங்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்தக்களுக்கும் மிக்க நன்றிங்க சார்.
கொயந்தயா இர்க்க கொதுத்து வச்சிர்க்கனும்!!
பதிலளிநீக்குகொயந்தையாத் தான் நான் இன்னும் இர்க்கேனாக்கும்.
நீக்கு(நிலவன்பன்... கொயந்தையா இர்ந்தா.. என்ன கொதுத்து வப்பீங்க..? கொதுங்க யனக்கு)
நன்றிங்க நிலவன்பன்.
அழகாக சொல்லியிருக்கிறீர்கள்....அவர்கள் அவர்கள் தான் நாம் நாம் தான்..:)
பதிலளிநீக்குகுழந்தையின் அறிவு மிகைத்து விட்டது எம்மில் பலரை விட...:)
சிட்டுக்குருவி...
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க.
குழந்தைகள் சில சமயங்கள்ல நாம சிந்திக்காத கோணத்துலல்லாம் சிந்திச்சு அசத்திடுவாங்க. கதையில வர்ற குழந்தையும் என்னை அசத்த்திட்டுது.
பதிலளிநீக்கு