திட்டித் திட்டி வாய்நோக
தீராக் கோபம் மூண்டெழவே
எட்டிக் காய்போல் சிலகவிதை
இருக்கக் கண்டு வெறுத்ததனால்
கொட்டும் தேனீ போன்றென்னைக்
திட்டி விட்டாய் பொறுக்கியென!
பட்டுப் பெண்ணே! உன்சொல்லைப்
பாவால் நெய்தேன்! படித்துப்பார்!
நறுக்கி நறுக்கிச் சமைத்திடவே
நங்கை பொறுக்கும் காய்கறிபோல்,
முறுக்கி முறுக்கிக் கயிறாக்க
முதலில் பொறுக்கும் பஞ்சினைப்போல்
பொறுக்கிப் பொறுக்கிச் சொற்களைநான்
பூவாய்த் தொடுத்தேன் கவிமாலை!
“பொறுக்கிப் புலவன்“ எனச்சொன்னாய்!
பொருந்தும் சொல்தான்! தவறிலையே!
ம்ம்ம் அருமை
பதிலளிநீக்குநன்றிங்க தோழரே.
நீக்கு(அது என்னமோங்க... நீங்க மூன்று “ம்“ போட்டதும் எனக்கு சந்தோசம் தாங்க முடியலைப் போங்க.)
பெரியாரை பொருக்கி என்றார்களாம்!
பதிலளிநீக்குஅதற்க்கு அவர் சொன்ன பதில்!;
ஆம்!நான் பொறுக்கிதான் !
சாத்திய கொடுமைகளை 'பொருக்கி' எடுப்பதால் -
என்றாராம்!
உங்கள் வார்த்தை வரி-
அழகுதான்!
பெரியாரின் கருத்துக்களை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே.
நீக்குஅவரைப் போல் பகுத்தறிவாதி நமக்குத் திரும்பவும் கிடைப்பார்களா.. என்ற ஏக்கம் நிறைய பேரிடம் இருக்கிறதுங்க சீனி.
நன்றிங்க.
அழகு....:)
பதிலளிநீக்குசிறுவர் பாடல்களையும் எழுதலாம் நீங்கள் உங்கள் கவிதைகளில் அப்படி ஒரு தொனி தெரிகிறது..
தொடர்ந்தும் எழுதுங்கள்...:)
நன்றிங்க சிட்டுக்குருவி.
நீக்குஉங்கள் விருப்பம் போல் சிறுவர் பாடல்கள் விரைவில் எழுதுகிறேன்.
பொறுக்கிப் பொறுக்கிச் சொற்களைநான்
பதிலளிநீக்குபூவாய்த் தொடுத்தேன் கவிமாலை!
“பொறுக்கிப் புலவன்“ எனச்சொன்னாய்!
பொருந்தும் சொல்தான்! தவறிலையே!//
கவிதை தலைப்புக்கு இந்தக் கவிதை சரி
ஆனாலுமுங்கள் கவிதைகளைப் படிக்கையில்
நீங்கள் வார்த்தைகளைப் பொறுக்கி எடுக்கிறார்கள் போல
தெரியவில்லையே.அழகிய வாலிபனைச் சுற்றிவரும்
இளம் வயதுப் பெண்கள் போல வார்த்தைகள்
அல்லவா உங்களைச் சுற்றிசுற்றி வருகின்றன
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி ஐயா...
நீக்குஉங்கள் காலத்தில் எல்லாம் வாலிபர்களைச் சுற்றி தான் இளம்வயது பெண்கள் வந்தார்களா...? ஆச்சர்யமாக இருக்குதுங்க.
ஏதோ என்னைச் சுற்றிசுற்றி வார்த்தைகளாவது வருதுங்களே...ம்ம்ம்
உங்களின் அழகிய பின்னோட்டத்திற்கு
மிக்க நன்றிங்க ஐயா.
very good
பதிலளிநீக்குநன்றிங்க கோகுல்.
நீக்குvery good writing
பதிலளிநீக்குதிரும்பவும் நன்றிங்க கோகுல்.
நீக்குபொறுக்கிப் புலவன் - அன்புடன் அழைத்தால் எதுவும் தவறில்லை என்பதை உங்கள் கவிதை உணர்த்தியது. நல்ல ரசனையான கவிதைகள் உங்களுடையதுப்பா அருணா.
பதிலளிநீக்குஆமாம் நிரஞ்சனா....
நீக்குபெண்கள் அன்புடன் ஆசைகலந்து போடா வாடா என்றாலும் ஒரு சுகம்தான். நீங்களும் உங்களவரை அப்படியே அன்புடன் (கோபமாக இல்லை) அழையுங்கள்.
(என்னவோ போப்பா... காதலியின் கடைக்கண் பார்வை கிடைப்பதற்கு இப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியுள்ளதுப்பா)
நன்றிப்பா நிரஞ்சனா.
ரமணி ஐயா சொன்னதைப் போல வார்த்தைகள் உங்கள் விரலில் விளையாடுகின்றன .
பதிலளிநீக்குவார்த்தைகள் விரலில் இல்லை சசிகலா... மௌசில் விளையாடுகிறதுன்னு இனி மாற்றிச் சொல்லனும்ன்னு நினைக்கிறேன்.
நீக்குநன்றிங்க சசிகலா.
இன்றுதான் உங்கள் வலைக்கு வந்தேன் ... நன்றாக உள்ளது
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.
நீக்குதொடர்ந்து வாருங்கள் நண்பரே!