.
நிலையாய் இருக்கும் என்றேநாம்
…..நெடிய வாழ்வை
எண்ணுகிறோம்!
வலையைப் போட்டே இழுக்கின்றான்!
….. வகையாய் மாட்டி
விடுகின்றோம்!
அலையாய் இன்பம் அடித்திருக்க
….. அமைதி யான வாழ்க்கையினைக்
கலைத்துப் போட்ட கோலத்தைக்
….. கண்டு நானும் துடித்திட்டேன்!
.
காதல் கொண்ட வாழ்வினிலே
….. கணவன் என்றும் தெய்வம்தான்!
சேதம் இல்லா வாழ்வினிலே
….. சேர்ந்த துன்பம் என்சொல்வேன்?
சாதல் என்றும் பழையதுதான் !
….. சகித்துப் போகச் சொன்னாலும்
பூத மனமோ மறக்காத
….. பொல்லா நிலைதான் என்சொல்வேன்?
.
அந்த செய்தி நானென்றும்
….. அறியா மலேயே
இருந்திருந்தால்
சொந்தம் கண்ட அனாதைபோல்
….. சுடரும் முகமாய் இருந்திருப்பேன்!
வந்த செய்தி இதயத்தை
….. வலிக்கச் செய்து
விட்டதினால்
சிந்தை முழுதும் அவள்நினைவாய்
….. சின்னத் தனமாய்
அழுகின்றேன்!
.
என்ன சொல்வேன் ஆறுதலாய்?
….. எதைதான் சொன்னால்
ஆறிவிடும்?
இன்ன வார்த்தை என்றிருந்தால்
….. இதயம் ஏந்தி
சொல்லிடுவேன்!
துன்பம் துடைக்க வார்த்தையில்லை!
….. துணிவாய் முன்னோர் சொன்னஉரை!
என்றும் மனத்தில் வைத்துவிடு!
….. இதுவும் கடந்து
போகுமென்றே!
.
பாவலர் அருணா செல்வம்
20.11.2020
வெள்ளி, 20 நவம்பர், 2020
இதுவும் கடந்து போகும்!!
லேபிள்கள்:
அறுசீர் விருத்தம்,
ஆறுதல் பாடல்,
இதுவும் கடந்து போகும்,
Kavithai,
SED SONG
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இன்னும் சிலவற்றும் கடந்து உருவெடுக்கும்...
பதிலளிநீக்கு