செந்தமிழே வருக!
-
(எடுப்பு)
செந்தமிழே வருக! – நாளும்
சிந்தையிலே அமர்ந்து
சொந்தமெனச் சொல்க!
-
(தொடுப்பு)
எந்தமிழே வருக! – எழுதும்
சந்தமதில் அமர்ந்து
விந்தையெலாம் தருக!
-
(முடிப்பு)
தோன்றிய காலமுன்தன் தொடக்கமும்
தெரியவில்லை
தொடர்ந்திடும் உன்பெயரை மறக்கவும்
முடியவில்லை
மூன்று காலமதில் மூத்தவளாய் இருந்து (2)
முன்னைத் தெய்வமென மூச்சினிலே கலந்த…..
(செந்தமிழே
வருக!)
-
கன்னித் தமிழென்று கவிஞர்கள்
கவிபடைத்தார்!
கனிந்தநற் சுவையென்று கனித்தமிழ்
எனவுரைத்தார்
பொன்னின் மேலேனப் புகழெலாம் கொண்டு (2)
பொலிந்திடும் அழகாய்ப் புதுமைகள்
புணைந்த….
(எந்தமிழே வருக!)
-
துள்ளும் ஓசையுடன் சுவையெனக்
கலந்திருந்தாய்
துாங்க லிசையாகத் தொடையுடன்
நடந்திருந்தாய்!
அள்ளும் செப்பலிலும் அழகுடனே நிறைந்து (2)
ஆனந்தம் பொங்கிட அணியெலாம் அணிந்த-----
(செந்தமிழே வருக!)
-
எந்தம் இதயத்தில் இன்னொளி
ஏற்றிவைத்தாய்
இயற்றும் பாடலிலே இறையென
நிறைந்திருந்தாய்!
சிந்து வண்ணமெனச் சீர்க்கவிகள் தந்து (2)
சிந்தையில் அமர்ந்த செழித்தயெம் உயிரே……
(எந்தமிழே வருக!)
-
பாவலர் அருணா செல்வம்
சிறப்பு...
பதிலளிநீக்குவலைப்பூ திறந்தவுடன் வேறு பக்கத்திற்கு செல்கிறது... கவனிக்கவும்... தேவையில்லாத சில gadgets நீக்கவும்...
பதிலளிநீக்குவணக்கம் தனபாலன் அண்ணா. எப்படி நீக்க வேண்டும். தயவுசெய்து தெரிவியுங்கள். நன்றி அண்ணா.
பதிலளிநீக்கு