ஏழிசை
நாதத்தை
இதயத்துள்
உருக்கியதை
வாயிசை
உணர்வாக
வற்றாமல்
அளித்தஉன்னை
என்னென்று
பாடுவேன் ?
ஏதென்று
எழுதுவேன் ?
.
துள்ளித்
திரியும் பருவத்தில்
தூக்க
மில்லா இரவுகளில்
அள்ளி
யணைக்கும் நேரத்தில்
அமைதி
கொஞ்சும் உள்ளத்தில்
சொல்லில்
சொக்கும் உயிரிருக்கும்
சொட்டும்
தேனின் சுவையிருக்கும்
நல்ல
மொழியின் நயமிருக்கும்
நடன
மாட விருப்பமிடும்
ஏழிசை
நாதத்தை….
.
காற்றில்
நம்மைப் பறக்கவிடும்
காந்தம்
போலே இழுத்துவிடும் !
ஊற்றின்
குளிரில் நனையவிடும்
ஊஞ்சல்
கட்டி ஆடவிடும்
ஏற்றும்
துன்ப நினைவினையும்
இசையின்
அழகால் மறக்கவிடும்
ஆற்றின்
நடையின் அழகான
ஆற்றல்
உடலில் ஊறிவிடும்
ஏழிசை
நாதத்தை….
.
ஏக்கம்
கொண்ட இறைவனவன்
ஏங்கி
உன்னை அழைத்தானோ
ஆக்கம்
போதும் என்றேநீ
அங்கே
செல்ல விழைந்தாயோ
நோக்கம்
எதுவோ இருந்தாலும்
நொந்த
எங்கள் மனத்திற்கு
ஊக்கம்
கொடுக்க உன்குரலே
உந்தி
மறைய வைத்தாலும்
ஏழிசை
நாதத்தை…..
.
பாவலர்
அருணா செல்வம்
28.09.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக