பொருள்தன்மை
அணி (பொருட்டண்மை)
ஒருவரிடம் உள்ள பொருள்களை அதன் தன்மை உடனே
பாடுவது “பொருட்டண்மை அணி“
எனப்படும்.
(உ
– ம்)
படர்ந்திருக்கும்
காதுகளும், பானை வயிறும்,
உடனிருக்கும்
தும்பிக்கை உந்த! – தொடர்ந்திருக்கும்
கண்கள், துணையாகும் கையும் விநாயகா
உன்தன்மை ஓத
உயர்த்து!
பொருள் –
பெரியதாய் விரிந்து படர்ந்து இருக்கும் காதுகளும், பானையைப் போன்று பருத்த வயிறும், அதனுடன் இருக்கும்
தும்பிக்கையும், அதை தொடர்ந்து இருக்கும் கண்களும், துணையாக இருக்கும் கைகளும் உள்ள விநாயகனே உன் தன்மையால் இப்பாடத்தை ஓதிட
என்னை உயர்த்து.
விநாயகரிடம் உள்ள பலவிதமான
தன்மைகளை உள்ளது உள்ளவாறு உரைப்பதால் இது பொருட்டண்மை அணி ஆகியது.
.
பாவலர் அருணா
செல்வம்
27.11.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக