கடன் கொடுத்து அது
திரும்பி வரவில்லை என்றால், ‘‘காந்தி கணக்குல எழுதிக்கோ‘‘ என்பார்கள். இதுபோல கொடுத்த
பணம் திரும்ப வராது என்பது உறுதியாகத் தெரிந்ததும் அதை, ‘‘காந்தி கணக்குல எழுதிட வேண்டியது
தான் என்பார்கள்.
அதாவது மகாத்மா காந்தி
பேங்க்கில் கணக்கு எதுவும் வைத்திருக்க வில்லை என்ற எண்ணத்தில் இப்படி சொல்வது உண்டு.
ஆனால், ஈரோடு பேங்க்
ஆஃப் இந்தியா, இது குறித்துத் தனது பாங்கில் உள்ள நோட்டீஸ் போர்டில் ஒரு அறிவிப்பை
அறிவித்தள்ளது.
‘‘1940- ஆம் ஆண்டில் பூனேயில் உள்ள ஆகாகான் மாளிகையில் மகாத்மா காந்தி சிறை வைக்கப்பட்டிருந்தார். அப்போது பூனேயில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியாவில் 10,000 ரூபாய் பணம் போட்டு சேமிப்புக் கணக்கைத்
தொடங்கினார். அடிக்கடி பணம் எடுத்ததால், இருப்பு குறைந்து கொண்டே வந்தது. கடைசியில்
வெறும் 248 ரூபாய் மட்டுமே மீதியாக நின்றது. இப்போதும் அப்படியே உள்ளது. இன்றும் இந்த
வங்கி, காந்தியின் கணக்கை அப்படியே வைத்திருக்கிறது‘‘
இது தான் அந்த அறிவிப்பு !
அப்படியானால் இதுதானே ‘‘காந்தி கணக்கு‘‘.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக