திங்கள், 2 மார்ச், 2015

படித்ததில் சிரித்தது. 2




1.இப்படி ஒரு நட்பு....!

அது ஒரு மனநல மருத்துவமனை.... அங்கே அழகன் என்ற பெயருடைய ஒருவர் சிகிட்சைப் பெற்று வந்தார்.
   ஒருநாள் புத்திரன் என்ற சக மனநோயாளி கிணற்றில் குதித்து விட்டதால், தன் உயிரைத் துச்சமென நினைத்துக் கிணற்றில் குதித்து அந்த நோயாளியைக் காப்பாற்றி விட்டார் அழகன்.
   அவரின் இந்த வீரதீரச் செயல் மருத்துவமனை முழுக்க பரவி விட்டது. அதைக் கேள்விப்பட்ட மருத்துவர் அழகனை அழைத்து, “உனக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும் சொல்லப் போகிறேன்“ என்றார்.
   உடனே அழகன், “சொல்லுங்க டாக்டர்“ என்றான்.
   “நீ உனது நண்பனைக் காப்பாற்றியதால் நீ சுகமடைந்து விட்டாய் என்று நினைக்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம். இது நல்ல செய்தி“ என்றார்.
  பிறகு, “துக்கமான செய்தி நீ கிணற்றில் குதித்துக் காப்பாற்றிய உன் நண்பன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டான்“ என்று டாக்டர் சொல்லி முடித்ததும் அழகன் ஆர்வமுடன் சொன்னான்,
  “டாக்டர்.... அவன் சாகவில்லை. கிணற்றில் விழுந்து நனைந்தவனை ஈரம் காயட்டும் என்று நான் தான் அவனது கழுத்தில் கயிற்றைக்கட்டி மரத்தில் தொங்கவிட்டு இருக்கிறேன். ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகி விடுவான்“ என்றான்.
  டாக்டர் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார்.
 -------------------------------------------------------------------------------------------------------------

2. இப்படி ஒரு நட்பு....!!!

இரவு ஒரு 12 மணி இருக்கும்...
   என் சொக கதைய கேளு தாய்குலமே..... ஆமா தாய்குலமே.... (அட ரிங் டோனு தாங்க...., ஊருல இருந்து நம்ம ஃபிரெண்டு தான்....)
   ஹலோ... சொல்றா மாப்ள... எப்படி இருக்க?“
   “நல்லா இருக்கேன்டா...“
   “அப்புறம்... என்னடா இந்த நேரத்துல?“
   “அது ஒன்னும் இல்ல மாமா. இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி. அதான் மப்பும் மந்தாரமுமா இருக்கேன்.“
   “ரைட்டு. என்ஜாய் பண்ணு. அப்புறம் சொல்லு. என்ன விசயம்?“
   “இரு ஒரு தம்மைப் பத்த வச்சிக்கிறேன்..... இம்.... நம்ம கவுருமெண்ட்க்கு அறிவே இல்லை மாமா....“
   “அதான் தெரியுமே... என்ன விசயம் சொல்லு?“
   “இன்னைக்கு மதுரைக்குப் போயிட்டு வந்தேன். வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தாங்க“
  “சரி. அதுக்கு என்ன?“
  “என்னத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்டப்பட்டு வளைச்சி போடணும்? அப்புறம் எதுக்கு போர்டு வைக்கணும்?“
   (அடப்பாவி.... நைட்டு 12 மணிக்குப் போன் பண்ணி கேட்க வேண்டிய டவுட்டடா இது? அவ்வ்வ்வ்வ்வ்வ்..... இன்னைக்கு இவன் போதைக்கு நாம தான் ஊறுகாய் போல....)
  “டேய் மாப்ள... உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சின்னு நெனைக்கிறேன். போயி தூங்கு...“
   “அது இல்ல மாமா..... இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தாங்க....“
  “சரி...“
  “அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே.... அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்?“
  “டேய் மாப்பள.... ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படு கேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன். என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாம மரியாதையா ஃபோன வச்சிட்டு படு“
   “ஹி ஹி ஹி.... தங்கச்சிக்கிட்ட திட்டு வாங்கினியா.... சரி சரி... படு... குட் நைட்........“

   கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் போன் அடித்தது.... அவனே தான்.... டென்சனா போனை ஆன் செய்து....
   “என்னடா மாப்பள?“
  “சாரி மாமா கோவிச்சிக்காத.... தம்மடிக்கனும். தீப்பெட்ய காணோம்... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா?“
   “டேய்..... நீ கோயமுத்தூர்ல இருக்க. நான் இங்க சிவகாசியில இருக்கேன்டா.....“
  “இல்ல மாமா.... கடைசியா நாம ரெண்டுபேரு தான் பேசிகிட்டு இருந்தோம்.... அதான் நீ எங்கையாவது பாத்தியான்னு கேட்டேன்.....“
  “டேய்ய்ய்ய்ய்ய்....“

படித்ததில் சிரித்தது.

அருணா செல்வம்.

18 கருத்துகள்:

  1. அடப்பாவி அழகா....! ஹா.... ஹா....

    ரிங் டோன் சரி தான்... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  2. இரண்டாவது செம்ம...
    ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  3. போதையில் இருப்பவருக்கும் , மனநோயாளிக்கும் ரொம்பவும் வித்தியாசமில்லை :)
    த ம 5

    பதிலளிநீக்கு
  4. முதலாவது வாய்விட்டு சிரிக்க வைத்தது...
    இரண்டாவது முகநூலில் மங்குனி அமைச்சர் என்ற நண்பர் பகிர்ந்தது என்று நினைக்கிறேன்... அருமை...
    பகிர்வுக்கு நன்றி அக்கா...

    பதிலளிநீக்கு
  5. இரண்டாவது படிக்காதது சிரிக்க வைத்தது. அருமை

    பதிலளிநீக்கு
  6. இரண்டுமே செம ஹ்ஹஹஹஹ ரொம்ப ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
  7. ஆஹா அழகனா கொக்கா ! ஈரமானால் காயவைக்கணும் அது மனிதனா இருந்தா என்ன துணியா இருந்தா என்ன ....பைத்தியத்துக்கு இரண்டும் ஒன்றுதான் ங்ஙெ.........!

    அருமை அருமை

    பதிலளிநீக்கு
  8. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்

    தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_31.html

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  10. நல்ல கதை. நீங்க யாரை காயவச்சீஙக் அருணா செல்வம்

    பதிலளிநீக்கு
  11. புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு