சொர்க்கம்!!
இறந்த பிறகு
சொர்க்கம் போகலாம்
என்பார்கள். நீ
என் அருகில்
இருக்கும் போதே
சொர்க்கம்
தெரிகிறதே...
2. இன்பம்!
என்னை நீ
பார்க்கும்
பொழுதெல்லாம்
இன்பம் என்றாய்.
உன்னை நான்
நினைக்கும் பொழுதும்
இன்பமடா.
3. பூ அழகா?
பூ அழகு
என்பார்கள்....
உன் புன்னகையைக்
காணாத வரையில்!
4. அமுதம்!
அமுதம் என்று
சொன்னார்கள்.. நான்
அறிந்ததில்லை.
குமுத வாயால்
நீ கொடுத்த
முத்தச் சுவையை
அறியும் வரை.
5. வா கண்ணே!
கோவிலுக்கு
ஏன் போகிறாய்?
சாமியிடம்
நீ கேட்கும்
நல்வாழ்வை
நான் தருகிறேன்.
என்னிடம் வா கண்ணே...
அருணா செல்வம்
05.02.2015
அருமை
பதிலளிநீக்குதம +1
வணக்கம்
பதிலளிநீக்குகுட்டிக்கவியை இரசித்தேன் படங்கள் அழகு பகிர்வுக்கு நன்றி
த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைத்தும் அசத்தல்...
பதிலளிநீக்குஐந்தும் அருமை.
பதிலளிநீக்குநோக்குவதும் நுகர்வதும் சுவைப்பதும் மட்டுமா இன்பம்? உங்கள் கவிதைகளைப் படிப்பதும் சுகம்தான்!
பதிலளிநீக்குதங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருந்தேன்.பிப்ரவரி 3
பதிலளிநீக்குblogintamil.blogspot.com/2015/02/blog-post_3.html
காண வருக,
முதலிலும் கருத்துரை ஒன்று இட்டு வந்திருக்கிறேன் சகோ. கவனித்தீர்களா...? என தெரியவில்லை. ஆகையால்....இப்போது இட்டேன்
அற்புதம்
பதிலளிநீக்குதூய்மையான காதல் மனம்
இப்படித்தான் நினைவு கொள்ளும்...
குறிப்பாக
இரண்டாம் கவிதையில் இயல்பாய் விழுந்த
"டா " பிடித்திருந்தது
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 6
பதிலளிநீக்குஅருமை! அருமை அனைத்தும்! ரசித்தோம்!
பதிலளிநீக்குமுக்நூல் கவிதைகளா ,முகம் பார்த்து வடித்த கவிதைகளா :)
பதிலளிநீக்குத ம 8
அனைத்தும் அருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குsimply superb.
பதிலளிநீக்குJayakumar