புதன், 14 ஜனவரி, 2015

பொங்கலோ பொங்கல்!



ஓயாது உழைத்த உழவரின் நல்மனம்
தேயாது இருந்திட, தேனான மாமழை
தேவைக்காய்ப் பெய்திட, தேடி விதைத்தது
சேவையெனத் தந்திட, செய்யும் தொழில்கள்
வளத்தைக் கொடுத்திட, வண்ணமிடும் மீன்கள்
குளத்தில் நிறைந்திட, கொண்டவள் கொஞ்சியே
புன்னகைப் பூத்திட, புண்மனம் கொண்டோரின்
வன்பகை ஓடிட, வஞ்சனை இன்றித்
தெளிதமிழ்ப் பேசிட, தெம்புடன் நாமும்
களிப்புடன் ஆடிட, காதலரும் கூடியே
போற்றிடும் பொங்கலாய்ப் பொங்கு!

(பஃறொடை வெண்பா)

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அருணா செல்வம்.
15.01.2015

33 கருத்துகள்:

  1. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    (எனக்கு சாதா வெண்பாவே தெரியாது!! இந்தப் பெயரில் எல்லாம் வெண்பா இருக்கிறதா?!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம் ஐயா.
      வெண்பாவில்

      நேரிசை வெண்பா
      இன்னிசை வெண்பா
      பஃறொடை வெண்பா
      குறள் வெண்பா
      இதழ் அகல் குறட்பா
      பின் முடுகு வெண்பா
      இப்படி இன்னும் பல தலைப்புகளில் இருக்கிறது.

      இப்போது இந்த இலக்கணங்களைப் பயன்படுத்தி அதிகமாக யாரும் எழுதுவதில்லை என்று நினைக்கிறேன்.

      எனக்கு நேரம் கிடைத்தால் இப்படி முயற்சித்து எழுதுவேன்.
      ஆனால் நேரம் தான் கிடைப்பதில்லை. ஆனால் நிறைய கற்பனை இருக்கிறது.

      உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஸ்ரீராம் ஐயா.
      நன்றி.

      நீக்கு
  2. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
      என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நம்பி ஐயா.
      நன்றி.

      நீக்கு
  3. வெண்பா பாடிவரும் கவிஞருக்கு, எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
      என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா.
      நன்றி.

      நீக்கு
  4. அழகான கவிதை.
    அமிர்தமாய் இருக்கிறது.

    பொங்கலாய், சக்கரை பொங்கலாய்
    தித்திக்கிறது.

    வாழ்த்துக்கள்.

    இங்கும் வாருங்கள்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தா வர வேண்டும்....
      நானும் அங்கு வரவேண்டும்.... அவசியம் வருகிறேன் தாத்தா.

      தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
      என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சுப்பு தாத்தா.
      நன்றி.

      நீக்கு
  5. வணக்கம்!

    அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
    இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
    நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
    பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!

    எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
    சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
    தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
    பொங்குகவே பொங்கல் பொலிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பொங்கல் வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞர்.

      தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
      என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கவிஞர்.
      நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
      என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தனபாலன் அண்ணா.
      நன்றி.

      நீக்கு
  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
      என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.
      நன்றி.

      நீக்கு

  8. வணக்கம்!

    போற்றுதமிழ்ப் பொங்கலைப் பொங்கும் புகழ்அருணா
    சாற்றுதமிழ் தங்கித் தழைத்தோங்கும்! - வேற்றுமொழி
    இன்றி இயற்றும் எழிற்கவிதை என்மனத்துள்
    ஒன்றி ஒளிரும் உவந்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாற்றுகவி தந்த தலைவரே! உம்தமிழ்
      ஊற்றுநீர் தந்த உணர்வு!

      நன்றி கவிஞர்.

      நீக்கு
  9. கவிதை நன்று!
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
      என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் புலவர் ஐயா.
      நன்றி.

      நீக்கு
  10. தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
      என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் காசிராஜலிங்கம் ஐயா.
      நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
      என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கில்லர் ஜி.
      நன்றி.

      நீக்கு
  12. அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
      என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சுரேஷ்.
      நன்றி.

      நீக்கு
  13. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் தோழி !
    த .ம .7:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
      என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தோழி.
      நன்றி.

      நீக்கு
  14. தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும்
      என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ராஜ் ஐயா.
      நன்றி.

      நீக்கு
  15. வெள்ளித் தட்டில் வைத்த தங்கக் கிண்ணமாய்
    மிக மிக அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. பொங்கலை இனியதமிழில் தந்து சுவை சேர்த்து விட்டீர்கள்! நாங்கள்தான் மிஸ் செய்து ஆறிய பொங்கல் என்று வந்தாலும் அற்புதமான சுவை!

    பதிலளிநீக்கு