வெள்ளி, 8 மார்ச், 2013

இரவின் புன்னகை!!




வட்ட நிலவு வானத்தில்
வந்து போகும் நேரத்தில்
எட்ட முடியா கற்பனைகள்
என்னுள் வந்து முளைத்தனவே!

கெட்ட கனவாய் நடப்பதுவும்
கேள்விக் குறியாய் பதில்கேட்கும்!
தட்ட முடியா நிகழ்வுகளைத்
தமிழில் நானும் தருகின்றேன்!

இருட்டுச் சூழ்ந்த கடற்கரையில்
இதயம் இணைந்த காதலர்கள்!
குருட்டு விழியன் பார்வையுடன்
கொஞ்சி மகிழும் தருணத்தில்

மருட்டும் மனிதர் இல்லையென்று
மனத்தால் மகிழ்ச்சி கொண்டிடுவார்!
இருண்ட விண்ணில் பலகண்கள்
இருந்து மகிழும்! அதையறியார்!

பள்ளம் மேட்டில் தேய்ந்துழைத்துப்
பணத்தைச் சேர்த்து மெலிந்தவனைக்
குள்ள நரியின் குணத்துடனே
கொள்ளை யடித்தார் இலஞ்சமென!

கள்ளத் தனத்தால் வந்தபணம்
கள்ளர் கொள்ளைக் கொள்வாரோ!
உள்ளம் பயந்து விழித்திருப்பார்!
உயரே வானம் இதைரசிக்கும்!

குடும்பச் சூழல் எனக்குடிப்பார்!
குடித்து விட்டுத் தனைமறப்பார்!
உடும்புப் பிடிபோல் ஒருசொல்லை
ஓரா யிரமாம் முறைச்சொல்வார்!

கடுப்பாய் இருக்கும் அவர்பேச்சு!
காதைப் பொத்தும் அவர்துணையைத்
துடுக்காய் பார்த்துக் கண்சிமிட்டித்
தூய இரவோ புன்னகைக்கும்!

இன்பம் பொங்கும் வாழ்வினையும்
இன்னல் ததும்பும் வாழ்வினையும்
துன்பம் கண்டு துவள்வதையும்
துணிந்து துன்பம் செய்வதையும்

நன்கண் பலமாய் திறந்துவைத்து
நடக்கும் அனைத்துக் காட்சிகண்டே
இன்பம் துன்பம் எதுநடந்தும்
இதமாய் இரவோ புன்னகைக்கும்!!


அருணா செல்வம்.
22.11.2012

22 கருத்துகள்:

  1. ///இன்பம் துன்பம் எதுநடந்தும்

    இதமாய் இரவோ புன்னகைக்கும்!!/// இரவின் வர்ணனைகளோடு புவியின் மாந்தர்களின் நடத்தைக் கோலங்களையும் சேர்த்து பகிர்ந்திருக்கும் விதம் அருமை.. வாழ்த்துக்கள் சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  2. ஒவ்வொன்றாக உண்மையை சொல்லி விட்டு, சிறப்பாக முடித்துள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  3. நன்கண் பலமாய் திறந்துவைத்து
    நடக்கும் அனைத்துக் காட்சிகண்டே
    இன்பம் துன்பம் எதுநடந்தும்
    இதமாய் இரவோ புன்னகைக்கும்!//

    நல்ல கவிதை தினமும் புன்னகைக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மலர் பாலன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பாலசுப்ரமணியம் ஐயா.

      நீக்கு
  5. இன்பம் துன்பம் அத்தனைக்கும் மௌன சாட்சியாய் புன்னகைக்கும் இரவு. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ராம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  7. வழக்கம் போல் அருமை அசத்துங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஆதிரா.

      உங்களின் வித்தியாசமான ஊக்குவிப்பு... தனி மகிழ்ச்சிதான்.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஆதிரா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  9. அருணா! அழகானா கவிதை இருக்க சோகமான கவிதை ஏன்?

    எட்ட முடியா வட்ட நிலா
    வானத்தில் வரும் இரவு பௌர்ணமி
    என் அழகு நிலா என்னருகில்
    இருக்கும் இரவுகள் எனக்கு பௌர்ணமி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி.

      பிரான்ஸ் குறளரங்கத்தில் இந்தத் தலைப்பைக் கொடுத்து எழுத சொன்னார்கள்...
      இந்தத் தலைப்பில் கிட்டத்தட்ட பனிரெண்டு பேர் கவிதை எழுதினார்கள். ஆனால் ஒரு சிலரைத் தவிர அனைவருமே உங்களின் கற்பனையில் தான் எழுதினார்கள்.
      ஏன் என்றால் இது பொதுவாக அனைவருக்கும் வரும் சிந்தனை இது தான்.

      நாம் ஒரு மாறுதலுக்கு மாற்றி எழுதுவோமே...
      என்று நினைத்தே எழுதினேன்.

      இதே நிலவைப்பற்றி நிறைய கவிதைகள் எழுதியும் இருக்கிறேன்.
      இதுவும் சோகமான கவிதை கிடையாது.
      எது நடந்தாலும் இரவு பார்த்துக்கொண்டு மட்டும் தான் இருக்கும் என்ற கருத்தில் எழுதினேன்.

      தங்களின் வருகைக்கும் கேள்விக்கும்
      கவிதைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு


  10. நன்கண் பலமாய் திறந்துவைத்து
    நடக்கும் அனைத்துக் காட்சிகண்டே
    இன்பம் துன்பம் எதுநடந்தும்
    இதமாய் இரவோ புன்னகைக்கும்!!

    கவிதையும் கற்பனையும் அருமை அருணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  11. அன்பின் அருணா செலவ்ம் - இரவின் புன்னகை அருமை - இரவில் நடக்கும் அனைத்துச் செயல்களையும் அமைதியாக்ப் பார்க்கும் குணம் கொண்ட நிலவு. சிந்தனை - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
    .

    பதிலளிநீக்கு
  12. எளிமையான வார்த்தை கோர்வை கவிகள் !

    பதிலளிநீக்கு