கூடிப் பிறந்தோம்! அன்னைநம்மை
கொஞ்ச மகிழ்ந்தோம்! கல்வியினை
நாடிப் பெற்றோம்! நன்மையென
நாலும் கற்றோம்! செல்வத்தைத்
தேடி அலைந்தோம்! கிடைத்தவுடன்
தீமை அஞ்சோம்! தெளிவின்றி
ஆடி அடங்கும் வாழ்க்கைநாம்
அறிந்து வைத்த செய்தியென்ன?
அன்பு என்ற அமிர்தத்தை
அன்னை ஊட்ட அறிகின்றோம்!
அன்பை அறியும் முன்னாலே
அதனுள் மூழ்கிப் போகின்றோம்!
தன்னுள் புகுந்த உயிரிடத்தில்
தானும் கலந்து தங்குவதால்
மின்னும் இந்தப் பூமியிலே
மீளாச் சிறைதான் அன்பன்றோ!
அன்பு.. அறிவில் இருந்துவிட்டால்
ஆன்ம சக்தி கிடைத்துவிடும்!
அன்பு மனத்தில் இருந்துவிட்டால்
ஆழ்ந்த கருணை பிறந்துவிடும்!
அன்பு.. உணர்வில் இருந்துவிட்டால்
ஆசை காதல் பிறந்துவிடும்!
அன்பு செயலில் இருந்துவிட்டால்
அகிம்சை ஞானம் பிறந்துவிடும்!
(அன்பு தொடர்ந்து வரும்)
//அன்பு.. உணர்வில் இருந்துவிட்டால்
பதிலளிநீக்குஆசை காதல் பிறந்துவிடும்!//
உண்மை தான் அன்பரே
நீங்கள் கேட்ட கேள்விக்கு உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன் பார்க்க
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க பிரேம்.
மெயில் பார்த்தேன். நான் கேட்டதும் உதவியதற்கு மிக்க நன்றி பாஸ்.
அன்பே அனைத்தும் என்பதை அன்பாகவும், அருமையாகவும் சொல்லி விட்டீர்கள்...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி...
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.
அன்பு மட்டும் இருந்து விட்டால் இந்த உலகமே பொய்ப்பித்துவிடும்........
பதிலளிநீக்குஅன்பர் மட்டுமே என இருந்துவிடுவோம்
அழகு கவிதை அர்த்தமுள்ளதுவும் கூட
தங்களின் வருகைக்கும் அழகிய கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க சிட்டுக்குருவி.
அனைத்தும் அன்பு மயம் என்பதை அழகாகச் சொல்கிறது மரபுக் கவிதை.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் அழகிய வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க முரளிதரன் ஐயா.
அன்பொன்றால் தான்
பதிலளிநீக்குஅனைத்தையும் பெறமுடியும் என
அருமையாய் உரைத்திட்ட கவிதை..
சொல்லாற்றல் மினுமினுக்கிறது நண்பரே...
அருமை..
உங்கள் வாழ்த்துக்கள் என் வலைப்புவை
நீக்குமேலும் மினுமினுக்க வைக்கிறது நண்பரே.
மிக்க நன்றிங்க.
anpu !
பதிலளிநீக்குarumai!
kavithai!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க நண்பரே.
''..தன்னுள் புகுந்த உயிரிடத்தில்
பதிலளிநீக்குதானும் கலந்து தங்குவதால்
மின்னும் இந்தப் பூமியிலே
மீளாச் சிறைதான் அன்பன்றோ...
தொடர்ந்து அன்பு பற்றி வாசிப்போம் நிறைந்த நல்வாழ்த்து. வரிகள் சிறப்பு.
வேதா.இலங்காதிலகம்..
தொர்ந்து மூன்று பதிவுகள் கொடுக்கிறேன் கோவைக்கவி அவர்களே.
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.
ஆடி அடங்கும் வாழ்க்கைநாம்
பதிலளிநீக்குஅறிந்து வைத்த செய்தியென்ன?
அழகு வரிகள் good keep it up
தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க நட்பே!
nice..
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க கோவி சார்.
நீக்குகோவி சார்....
நீக்குஉங்கள் கவிதைகளைப் படிக்க ஆசையாக இருக்கிறது. ஆனால் வலை ஆடிக்கொண்டே இருக்கிறது. கொஞ்சம் பாருங்கள் ப்ளீஸ்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்று வள்ளுவர் சும்மாவா சொல்லி வைத்தார்?
பதிலளிநீக்குகுறை கூறுவதாக எண்ண வேண்டாம் ஐயா... கூடிப் பிறந்தோம் ... நாடிப் பெற்றோம் என வலிமிகுந்து வருவதே மரபுக்கு அழகு
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது தான் சரிங்க.
நீக்குஇகர ஈற்று வினையெச்சத்திற்கு பின் வல்லினம் மிகும்.
நான் தான் தவறாக எழுதிவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே.
இதில் குறை என்ன இருக்கிறது? தவறுகளை உங்களைப் போல் கற்றோர் தைரியமாகச் சுட்டிக்காட்டினால் தான் என்னைப்போன்றோர் தெரிந்தோ... தெரியாமலோ செய்த பிழையைத் திருத்திக்கொள்ள முடியும்.
(தவிர நண்பரே... என்னை ஐயா என்றெல்லாம் பெரிய வார்த்தை இட்டு தயவுசெய்து அழைக்க வேண்டாம்.)
நன்றிங்க.
மரபு உங்களுக்கு நன்கு வாய்த்திருக்கிறது... வாழ்த்துகள்
பதிலளிநீக்குஉங்களின் தொடர் வருகைக்கு என் மனமார்ந்த நன்றிங்க நட்பே.
நீக்குஅனபு சரியாகக் கிடைக்காவிட்டால் வாழ்வே வெறுமையடைகிறதே !
பதிலளிநீக்குஎன் இனிய தொழி ஹேமா...
நீக்குஅன்பு நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும்
நாம் மற்றவர்களுடன் அன்பாக இருப்போம்.
இதனால் நம் வாழ்க்கை வெறுமையடையாமல்
பெருமை கொள்ளும் தோழி.
நன்றிங்க ஹேமா.
அழகான அன்பு கவிதை.
பதிலளிநீக்குஏதோ மனது லேசாகிறது ..