.
சீர்ச்சுடர்போல் தோன்றிச் சிறப்புறும் தோன்றிமலர்
கார்காலம் வந்திடக் காத்திருக்கும் வேர்மண்ணில்!
செவ்விதழ்கள் மேல்நோக்கச் சேவலின் கொண்டைபோல்
கவ்விடும் நெஞ்சைக் கவர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
07.06.2022
(காந்தள் என்பது செங்காந்தள்
கோடல் என்பது வெண்காந்தள்
தோன்றி என்பது இருநிறமும் கொண்ட காந்தள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக