சனி, 14 நவம்பர், 2015

யாரையெல்லாம் பாராட்டலாம் ?



    பாராட்டு என்பது எந்த ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பரிசு. ஒருவரின் கலைத் திறமையைப் பாராட்டாமல் ஒரு பரிசை மட்டும் கொடுத்தால் அவர் செய்த வேலைக்குக் கூலி கொடுத்தது போல் ஆகும்.
    பணம் கொடுக்கும் இன்பத்தை விட ஒரு கலைஞனுக்குப் பாராட்டு அதிக இன்பத்தைக் கொடுக்கும். நீங்கள் ஒருவரைப் பாராட்டும் போது அவர் மனத்தில் நீங்கள் உயர்வாக அமர்த்தப் படுகிறீர்கள்.
   பாராட்டு என்பது ஒருவரின் திறமைக்காக என்பது மட்டுமின்றி அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் ஏதுவாகிறது.
    ஒன்றுமே அறியாமல் எதோ ஒரு நல்ல செயலைச் செய்யும் குழந்தையையும் பாராட்டலாம். அதே சமயம் ஒரு கலையில் மூழ்கி அனைத்தும் கற்றவரின் திறமையையும் பாராட்டலாம்.
    ஒரு குழந்தையைப் பாராட்டுவது ஊக்குவிப்பு ஆகும். ஆனால் ஒரு கலையைக் கற்று புகழின் உச்சத்தில் இருப்பவரை ஏதும் அறியாதவர் பாராட்டலாமா ? என்று கேட்டால்…. பாராட்டலாம். பாராட்ட வேண்டும்.
    நான் அனுபவத்தில் கண்டதைச் சொல்கிறேன்.
   போன முறை இந்தியா சென்றிருந்த போது ஒரு திருமண விழாவில் தவில் வித்துவான் வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பரமணியன் ஐயா அவர்களின் கச்சேரி கேட்க நேர்ந்தது. எனக்கு பொதுவாக அதிக சத்தம் இருந்தால் பிடிக்காது. ஆனால் அன்று இந்த வித்தவானின் திறமையை வெகுவாக இரசித்தேன். எனக்கு அவரிடம் சென்று அவரைப் பாராட்டி இரண்டொரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்தது.


   ஆனால்…
   எனக்கு தவிலைப்பற்றியோ, அவர் வாசித்த இசை குறிப்புகள் பற்றியோ ஒன்றுமே தெரியாது. கேட்க நன்றாக இருந்தது. இரசித்தேன். அவ்வளவு தான். இருந்தாலும் அவரிடத்தில் அவர் திறமையால் நான் கேட்டு மகிழ்ந்ததைச் சொல்ல வேண்டும் என்றே தோன்றியதால்…. கச்சேரி முடிந்ததும் தயங்கித் தயங்கி அவரிடம் போய் என்னை அறிமுகப் படுத்திவிட்டு ‘ஐயா எனக்கு தவில் கலையைப் பற்றியெல்லாம் தெரியாது. அதனால் எதைச் சொல்லி எப்படி பாராட்டவது என்று தெரியவில்லை. ஆனால் நான் உங்கள் கச்சேரியை விரும்பி ரசித்தேன் ஐயா‘ என்றேன்.
   அவர், ‘ஏதோ விழாவிற்கு வந்தோம், கேட்டோம். சென்றோம் என்றில்லாமல், காத்திருந்து இந்த ஒரு வார்த்தையைச் சொன்னதே போதும். ஒரு கலைஞனை இப்படித்தான் பாராட்ட வேண்டும் என்ற வகை அறிந்து பாராட்டுவதை விட மனதில் பட்ட மகிழ்ச்சியுடன் பாராட்டுவது தான் எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி. நன்றாக இருமா‘ என்று அவர் என்னை வாழ்த்தி அனுப்பினார்.
   இதே போலதான் ஆச்சி மனோரம்மாவைச் சந்தித்து, கொண்டு சென்ற அன்பளிப்பைக் கொடுத்த போது ‘எதுக்குமா இதெல்லாம். என் நடிப்பை ரசிச்சி என்னைப் பார்க்க வந்து பாராட்டியதே எனக்கு பெரிய சந்தோசம்…’ என்று அருகில் இருந்த தன் உதவிப்பெண்ணைப் பார்த்து பயந்த படியே( ?) சொன்னார்.
   ஆச்சியம்மாவிற்கு இல்லாத ரசிகர்களா… ? அவர்களுக்குக் கிடைக்காத பாராட்டா…. ? இருந்தாலும் என் பாராட்டையும் விரும்பினார்கள்.
   ஆக, அனைத்து உள்ளங்களுமே தான் செய்யும் காரியங்களுக்கான உரிய பாராட்டை விரும்புகிறது. திறமை உள்ள அனைவரையும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது பாராட்டிவிடுங்கள்.
   இவரின் திறமையைப் பாராட்ட தமிழில் வார்த்தைகளே இல்லை என்று நினைத்து, அவரைப் பாராட்டாமல் இருந்தால் நம் மனத்தில் கொண்ட மகிழ்ச்சி அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது.
   சரியான திறமையை வாய்விட்டு பாராட்டுங்கள். ஆஹா, அருமை, நன்றாக இருக்கிறது, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், சூப்பர், எக்ஸலன்ட், இப்படி ஏதாவது சொல்லி பாராட்டுங்கள்.
   கற்றுத் தரும்போது அவனும் கற்றுக் கொள்கிறான் என்பது போல ஒருவரைப் பாராட்டும் போது பாராட்டுபவனும் உயர்ந்தவனாகிறான்.

அன்புடன்
அருணா செல்வம்.
14.11.2015


35 கருத்துகள்:

  1. 500 வது படைப்பினுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தய்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  2. அனைவரிடமும்
    அன்பூ.பாராட்டுவோம்.
    நட்பூ... பாராட்டுவோம்.
    நல்லன கண்டு
    மனமாற பாராட்டுவோம்..

    ஆயினும் வேண்டாத சில பாராட்டுகள்
    கோபம் பாராட்ட வேண்டாம்.
    விரோதம் பாராட்ட வேண்டாம்.
    எதிர்மறை சிந்தனை பாராட்ட வேண்டாம்.

    பொருட்பிழையிருப்பின்
    பொறுத்தருள்க..

    எழுத்து பிழையிருப்பின்
    எடுத்தியம்புக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ‘அன்பே சிவம்‘ அவர்களே.

      நீக்கு
  3. பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க! (http://dindiguldhanabalan.blogspot.com/2012/01/blog-post.html)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  4. கலைஞரை – மன்னிக்கவும். ஒரு கலைஞரை எப்போதுமே பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் உற்சாகம் அடைகிறார்கள். தங்கள் 500 ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்.

    பாரீஸ் எப்படி இருக்கிறது? பாரீஸ் பயங்கரத்தைப் பற்றிக் கேள்விப் பட்டதும், பிரான்ஸ் தமிழ்ச் சங்க நண்பர்கள் எப்படி இருக்கிறார்களோ என்ற எண்ணம்தான் முதலில் தோன்றியது. முடிந்தால் அந்த பயங்கரத்தைப் பற்றி, தாங்கள் கண, கேட்ட, படித்த தகவல்களை ஒரு பதிவாகப் போடவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிழை திருத்தம் : கடைசி வரியில் – ”தாங்கள் கண, கேட்ட, படித்த” என்பதனை > ”தாங்கள் கண்ட, கேட்ட, படித்த” – என்று வாசிக்கவும்.

      நீக்கு
    2. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.
      உங்கள் ஆசை நிறைவேற்றப்பட்டது.

      நீக்கு
  5. அருணா!
    ஏன் என்னை பாரட்ட கூடாதா? அப்படி பாரட்ட முடியாதபடி நான் என்ன பாவம் செய்தேன்----உண்மையை உரக்கக் கூறுவதை தவிர?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சில உண்மைகளை உரக்கக் கூறுவதும் தவறு தான் நம்பள்கி.
      அதே சமயம் ஓர் உண்மையை முகமூடி இன்றிக் கூறுவதற்கும் தைரியம் வேண்டும்.

      நீங்கள் எழுதிக்கொண்டிருப்பதெல்லாம் மக்கள் அறியாதது அல்ல. ஆனால் உங்களின் ஆற்றாமையைக் கொட்டுகிறீர்கள். இருப்பினும் உங்களின் துணிவைப் பாராட்டாமல் இருக்க முடிவதில்லை. தொடருங்கள். தொடருகிறேன்.

      நன்றி.

      நீக்கு
  6. பாராட்டுக்கு ஏங்காவதங்களே இல்ல அருணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்ககெல்லாம் வீட்டில் எதைச் செய்தாலும் பாராட்டு கிடைப்பதில்லை. ம்ம்ம்....

      நீக்கு
  7. ஆங், சொல்ல மறந்துட்டேன் 500க்கு வாழ்த்துகள் அருணா!

    பதிலளிநீக்கு
  8. பாராட்டுவோம்
    கண்ணில் கண்ட நல்ல காட்சிகளை, நிகழ்ச்சிகளைப் பாராட்டுவோம்
    தங்களது 500வது பதிவிற்கும் பாராட்டுக்கள் சகோதரியாரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. 500 படைப்பா???!!!!! வாழ்த்துக்கள்...தொடர்கிறேன்...நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க... வாங்க....
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி .

      நீக்கு
  10. சிறந்த கண்ணோட்டம்
    சிந்திக்கச் சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. உண்மையே பாராட்டுவதற்க்கு வரைமுறையில்லை மனதில் உள்ளவற்றை கொட்டினாலே போதுமானதே... பாராட்டுத்தான் ஒரு கலைஞனை வளர்க்கிறது

    500 விரைவில் 1000 ஆக எமது வாழ்த்துகள்
    தமிழ் மணத்தில் நுளைக்க 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டி பாராட்டைப் பெறுவோம்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  12. 500 வது படைப்பா அம்மாடியோவ்! பாராட்டுகள்! வாழ்த்துகள் சகோ!

    அருமையான பதிவு! சிறு குழந்தை முதல், பெரியவர் வரை எல்லோருமே ஒரு டானிக் போல விரும்பும் ஒன்றுதான். பாராட்டுவோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  13. பாராட்டுக்கள்! மேலும் பல படைப்புக்கள் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  14. சரியான பாராட்டு விதைக்கு தேவையான முதல் ஒரு குவளை நீர். அழகாய் உணர்ந்து பாராட்டியதற்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி மைதிலி தோழி.

      நீக்கு
  15. 500-ஆவது படைப்பு. மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  16. தமிழில் வார்த்தை இருக்கோ இல்லையோ 5௦௦ க்கு வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  17. கலைஞரை பாராட்டுங்கள் என்று சொல்லி நீங்கள் எழுதிய பாராட்டுப் பதிவிற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! மேலும் மேலும் எழுதிப் புகழ் பெற இன்னொரு சிறப்பு வாழ்த்து.

    பாராட்டுக்கள் தான் எல்லோரையும் உற்சாகப்படுத்தும். எல்லோரையும் பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலைஞரைப் பாராட்டுங்கள்..... சரியாகத் தானே எழுதி இருக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி ரஞ்சனி அம்மா.

      நீக்கு
    2. சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள், அருணா. நான் தான் 500வது பதிவிற்குப் பாராட்டுகள் என்று குறிப்பிட மறந்து விட்டேன்.

      நீக்கு