.
அன்பு
நிறைந்த அன்னை உருவாக
அன்று கண்டாள் அருமை மனத்தினிலே !
இன்பச் சொற்கள்
இணைந்து குழைவாக
என்றும் கேட்கும் என்றே நினைத்திருந்தாள்!
துன்பம் துயரம்
எனுஞ்சொல் அவரிடையே
துளியும் தொடுமா என்றும்
இறுமாந்தாள் !
வன்மைக்
காலம் வந்தத் தடமில்லை !
வகையாய் பிரிந்தார் ! வஞ்சி
என்செய்வாள் ?
.
ஏக்கம் கொண்ட
மனத்தை உள்மறைத்தே
ஏதும் அறியா தவளாய் சிரித்திருப்பாள் !
தூக்கங்
கெட்டுத் துவளும் உடல்வெளுத்தும்
துணிவைப் போர்த்தி துள்ளி வலம்வருவாள் !
ஆக்கம் பொழியும்
பண்ணில் பொருள்சேர்த்தே
அமைதி யாகப் பாடி விழித்திருப்பாள் !
நோக்க
மில்லாக் குருட்டு நெஞ்சுடையான்
நூலில்
புழுவாய் புதைந்து மகிழ்ந்திருப்பான் !
.
தூது சொல்ல
தோழி இல்லையென்று
துணையாய்ப் பண்ணைத் தொடுத்துப்
பறக்கவைப்பாள் !
ஏது மறியா
தவன்போல் படித்தாலும்
எழுத்த றிவற்ற மூடன் போலிருப்பான் !
ஓதும் பாடம்
வேத மெனஒலிப்பான் !
உய்யும் வாழ்வில் பேதம் காட்டிடுவான் !
மாது
மயங்கி மாலை நினைத்தழுவாள்
மயக்கும் கவியுள் அவனைப் பதிக்கவைத்தே !
.
(அரையடிக்கு
மா + மா + மா + காய் என்ற சீரமைந்த எண்சீர் விருத்தம்)
.
பாவலர்
அருணா செல்வம்
17.12.2021
எழுத்தின் வண்ணத்தை மாற்றினால் ரசிப்பதற்கு எளிது...
பதிலளிநீக்குவணக்கம் தனபாலன் அண்ணா. வண்ணத்தை மாற்ற முடியவில்லை. அதனால் இப்பதிவை நீக்கலாம் என்று நினைக்கின்றேன்.
பதிலளிநீக்குஅனைத்தப் பதிவுகளையும் படித்தி நீங்கள் கருத்திடுவது எனக்கு உர்சாகத்தை அளிக்கிறது. மிக்க நன்றி,