புதுத்தாலி அணிந்த மணமகளே!
நித்தம் இன்பம் பெருகிடவே
நெஞ்சம் நிறைந்து வாழ்ந்திடவே
வலது காலை வைத்து வருகவே! - நல்
வாழ்வு மலர வாழ்கவே! (புத்தம் புதிய )
அம்மி மிதித்த அருந்ததியே
அன்பால் மலர்ந்த நறும்பூவே!
கம்பர் பாடிய நாயகியே
காதல் நிறைந்து வாழ்ந்திடவே
வலது காலை வைத்து வருகவே! - நல்
வாழ்வு மலர வாழ்கவே! (புத்தம் புதிய )
தேடி உன்னை மணந்தவனே
தெய்வம் தந்த துணையவனே!
கூடி இன்பம் களித்திடவே
குலமும் தழைத்துப் பெருகிடவே
வலது காலை வைத்து வருகவே! - நல்
வாழ்வு மலர வாழ்கவே! (புத்தம் புதிய )
பிறந்த வீடு மகிழ்ந்தடவே
புகுந்த வீடு மதித்திடவே
சிறந்த பெருமை காத்திடவே
செல்வம் எல்லாம் சேர்ந்திடவே
வலது காலை வைத்து வருகவே! - நல்
வாழ்வு மலர வாழ்கவே! (புத்தம் புதிய )
அத்தை மாமன் மனம்நிறைய
அன்பு கணவன் அகம்மகிழ
அங்கே வாழ்ந்த லட்சுமியும்
ஆசை பொங்கி உனைஅழைக்க
வலது காலை வைத்து வருகவே! - நல்
வாழ்வு மலர வாழ்கவே!! (புத்தம் புதிய)
கவிஞர் அருணா செல்வம்
19.10.2015
அருமை
பதிலளிநீக்குஅழகான பாடலை ரசித்தேன்...
பதிலளிநீக்குஅருமைசகோதரியாரே
பதிலளிநீக்குஅருமை
நல்ல பாடல்....வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமை சகோதரி! இதை யாரேனும் இசையமைத்துப் பாடி இசைத்தட்டாக வெளியிட்டால் நன்றாக இருக்குமோ...
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குஅருமையான பாடல்...பாராட்டுக்கள்!
பதிலளிநீக்கு