.
தனனந் தனனன தனனந் தனனன
தனனந் தனனன தனதானா (ஒரு கலைக்கு)
.
உலகின் முதலென உணரும் வகையினி
னொளிருங் கணபதி பெருமானே!
உதவும் வகையொடு கதறும் மனதினி
லொளிரும் நலமதை யருள்வாயே!
பலரின் கருமொழி நிறையும் மனமது
பதியும் பொதியொடு சுமையாமே !
படியுங் கழிவினை மறையும் வழியது
பரமன் தொடர்கிற இடந்தானே!
நிலவும் பழவினை நினைவும் விலகிட
நெடிதுன் விழிதனி லறிந்தாலே
நியமந் தருகிற வழியுந் தொடரிட
நிறையும் வரமது வரும்தாமே !
மலருங் கனிகளு மிணையுஞ் சுவையொடு
மணமும் நிறைகிற நெகிழ்வோடே
வளருங் கவியொடு பணியுந் தலையொடு
மனதும் வழிபட மகிழ்வாயே!
.
தோழ தோழியர் அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி
வாழ்த்துகள்.
.
என்றும் அன்புடன்
பாவலர் அருணா செல்வம்
18.09.2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக