ஒருநாள்
அறிந்தேன் ! உயிராய் உணர்ந்தேன் !
திருவாய்
மொழிந்தாய் ! திடமாய்க் கலந்தேன் !
கருவாய்
வளர்ந்தாய் ! கவியாய்ப் பிறந்தாய் !
உருவால்
தமிழாள் ! உயர்ந்தேன் வளமாய் !
மனமோர்
குரங்காம் ! மதியோ நிலவாம் !
கனமோர்
தலைப்பால் கவியாய்ப் புணைந்தேன் !
இனமாய்
இருந்தால் எதுதான் கசப்பாம் ?
சினமோ
எழுந்தால் சிரம்தான் ! குலைந்தேன் !
உனையே
நினைத்தேன் ! உறவாய் மதித்தேன் !
பனைபோல்
வளர்ந்தாய் ! பனிபோல் மறைந்தாய் !
எனையே
மறந்தேன் ! இனியார் இருப்பார் ?
நினைவே
வளர்வாய் ! நிறைவே தருவாய் !
புவியோ
பொதுவாய்ப் புறனே புணைந்தால்,
செவியே
செயலால் செவிடாய் இருப்பாய் !
தவியாய்த்
தவித்தே தனியாய் இருந்தால்
கவிதான்
வருமோ ? கனியாய்க் கரும்பாய் ?
அணைபோல்
திரண்டே அறிவே வளர்வாய் !
கணைபோல்
விரைந்தே கலையே அருள்வாய் !
இணைந்தே
இருப்பாய் இனிதாய்த் தமிழே !
துணையாய்
இருப்பாய் ! தொடர்வேன் தொழுதே !
(சந்த
விருத்தம்)
கவிஞர்
அருணா செல்வம்
14.07.2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக