(உலக ஊனமுற்றோர் தினமாம் இன்று! – சேனல் -4)
அட ராமா...
அரக்கனவன் அபகரித்த
அனல்வந்த பெண்ணவளைக்
காப்பாற்ற ஓடிவந்தாய்
காரியத்தில் கண்ணாக!
எதை நினைத்து
ஏவினாலும்
அதை முடிக்கும்
பாணமிருந்தும்..
நம்பாமல்
எதிரியின் பலமறிந்து
உதவிக்கென்று
யார் வரவையும்
ஏற்றுக்கொண்டாய்!
போர் தர்மம்
அறிந்திருந்தும்
வாலி வதம்
வஞ்சம் தான்!
எதிரிக்குத் துரோகி
உனக்கு நண்பன்!
சூழ்ச்சிக் காரனுக்குச்
சூட்டினாய் அரசவாகை!
ஏனென்று கேட்டோமா?
தவறென்று சொன்னோமா?
உன்னுடமை உனக்குத்தான்
என்றிருந்தோம் பேசாமல்!
எம்முடமை எம்நாடு
எடுத்துரிமைக் கேட்டாலோ
எம்மை வதம் செய்கின்றார்.
யார் கேட்பார் எமக்காக?
பால் மறவா பச்சிளங்கள்..
பள்ளியறியா பாலகங்கள்
சூது வாது தெரியா
சிறுவர் சிறுமியர்..
..................
........................
யாருக்காக யார் அழ..
யாரிருக்கா எமக்கு அழ..
அழுது அழுது
கண்ணீர் வற்றி
அதற்கு பதில்
குருதியாகி ஓடுகிறது :
உடம்பில் மட்டும் ரணமில்லை!
உள்ளத்தையும் ஊனமாக்கி
விட்டாயே ராமா...
,iw tzf;fk;!
Jk;gpf;if
JHath! td;Jau;j; jPu;j;jpLk;
ek;gpf;if
ehafh! ,q;nfidf; - nrk;ikahf;f
ck;kpid
ahUsu;? Xq;fhu Ntjth
vk;ikAk;eP
fhg;gha; ,Ue;J!
மிகவும் வலி நிறைந்த கவிதை....!!
பதிலளிநீக்கு“மிகவும் வலி நிறைந்த கவிதை....!!“
பதிலளிநீக்குஐடியா மணி
வலிகளுக்கு வார்த்தையால் மருந்திட
முயற்சித்தேன் ஐயா!
மனம் கனக்கிறது அருணா. கேள்விகளில் இருக்கும் நியாயம் இங்கு யாருக்கும் புரியாமல் இல்லை, பதில் சொல்லத்தான் விருப்பமில்லை.
பதிலளிநீக்கு“மனம் கனக்கிறது அருணா. கேள்விகளில் இருக்கும் நியாயம் இங்கு யாருக்கும் புரியாமல் இல்லை, பதில் சொல்லத்தான் விருப்பமில்லை.“
பதிலளிநீக்குநன்றி கீதமஞ்சரி!
சொல்லாத பதிலால் பல கேள்விகள்
முளைக்கும் தானே..
இங்கு ராமன் எங்கு வந்தான்.? அவரவர் குறைகளுக்கு கற்பனைக் கதாபாத்திரம் என்ன செய்யும்.? என் அல்லல்களுக்கு நானே பொறுப்பு. அடுத்தவனை ஏனோ குறை கூறுகிறீர்.?கவிதை நன்று. பொருள் ஏற்புடையதல்ல. மாற்றுக் கருத்து தெரிவிக்கலாம் அல்லவா.?
பதிலளிநீக்குதாங்கள் மறுப்பு கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா!
நீக்குகற்பனைப் பாத்திரங்களுக்குக் கடவுள் என்ற நம்பிக்கை இருக்கும் பொழுது அதைச் சாடுவது நியாயமானது தான் ஐயா!
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
பதிலளிநீக்குநன்றி
யாழ் மஞ்சு
உங்கள் உதவிக்கு மிக்க நன்றி யாழ் மஞ்சு.
நீக்குஉங்கள் வலைச்சரத்தில் என் படைப்பையும் ஒரு மலராக நினைத்து சரம் தொடுத்தமைக்கு நன்றி கீதமஞ்சரி!
பதிலளிநீக்குதங்கள் கேள்வி நியாயமானதே
பதிலளிநீக்குஅதுவும் ராமனிடம் கேட்பதே மிகச் சரி
ஊனமான மனத்தின் அவலம் சொல்லிப் போகும் பதிவு
மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்
“மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்“ - ரமணி அவர்கள்
நீக்குதங்கள் வரவிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.
நெஞ்சம் கனக்கும் வரிகள்
பதிலளிநீக்குநல்ல கவிதை
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க செய்தாலி.
அழுது அழுது
நீக்குகண்ணீர் வற்றி
அதற்கு பதில்
குருதியாகி ஓடுகிறது :////
மனதின் ரணத்தை சொல்லும் உணர்வுள்ள வரிகள்!
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
நீக்குமிக்க நன்றிங்க நம்பிக்கை பாண்டியன்.