என்றுமில்லாமல்
இவ்வருடம்
ஆசைப்பட்ட
பட்டுப்புடவை
வாங்கியாச்சு.
மஞ்சள்
நிறத்தில்
மரகத
பச்சை இலையழகு!
பண்டிகைகளில்
நான்
பார்க்கவே
பகட்டாகப்
பண்டத்துடன்
வந்து
பேசும்
அடுத்த
தெரு
கவிதாவிடம்
மிடுக்காகக்
காட்டிவிட
வேண்டும்.
பணமின்றி
நின்ற
பண்டிகையில்
பிள்ளைகளைத்
தேடி
பலகாரம்
தந்திடும்
பால்யதோழிக்கு
நிறைய
பலகாரம்
தரவேண்டும்.
பகல்
பொழுதில்
பக்கத்து
ஊரில்
அம்மாவுக்கு
வாயல் புடவை
அப்பாவுக்கு
கதர் வேட்டி
கூடவே
ஆயாவுக்குப்
பிடித்த
அதிரசம்….
கணவன்
வந்ததும்
கிளம்பவேண்டியது
தான்
மடியில்
மாஸ்க்
விற்ற
பணம்
பத்திரமாக
இருந்தது.
வந்து
சொன்னான்
வெளியில்
போக முடியாது
ஊரடங்கு
என்று!
.
பாவலர்
அருணா செல்வம்
13.11.2020
இன்றைய யதார்த்த நிலை...
பதிலளிநீக்கு