குட்டி என்றே தலைப்பிட்டுக்
….. கொஞ்சும் தமிழில்
பாடவந்தேன்!
மெட்டி போடும் பெண்நானோ
….. மெல்ல எண்ணிப்
பார்க்கின்றேன்!
புட்டி குட்டி ஆசைகளைப்
….. போற்றி மகிழ்வர்
ஆண்கள்தான்!
கொட்டி வளரும் கற்பனையில்
….. குட்டி என்றே
எதையெடுப்பேன்?
.
கட்டிப் போட்ட கன்றினையும்
….. காலைச் சுற்றும் பூனையையும்
விட்டே அகலா நாயினையும்
….. வெறுத்துத்
துறத்தும் எலியினையும்
தொட்டால் சிலிர்க்கும் முயலினையும்
….. துள்ளி ஓடும்
மானினையும்
குட்டி என்றே அழகாகக்
….. கொஞ்சும் கவியில் காட்டிடலாம்!
.
பிறந்து சிலநாள் ஆனவுடன்
….. பெரிய உருவாய் இவைமாறும்!
கறந்த பாலாய் இருந்தகுணம்
….. கரடு முரடாய் மாறிவிடும்!
சிறந்த சொல்தான் குட்டி!அது
….. சீக்கி ரத்தில்
வளர்கிறதே!
புறத்தைக் கண்டே சொல்கின்றோம்!
….. பொதுவில் இவைதாம் குட்டியென்றே!
.
பாவலர் அருணா செல்வம்.
அருமை...
பதிலளிநீக்கு