நட்புறவுகளுக்கு வணக்கம்.
போன
ஞாயிறு அன்று எங்கள் ஊரில் தமிழர்த் திருநாள் தைப்பொங்கல் விழாவைச் சேர்ந்து சிறப்பாகக்
கொண்டாடினோம்.
எப்போதும்
போல அந்த விழாவில் பாட பொங்கல் பாடல் கேட்டார்கள். உடன், பாச மலர் படத்தில் வரும் ’எங்களுக்கும்
காலம் வரும். காலம் வந்தால் வாழ்வு வரும்‘ என்ற பாடலைப் பொங்கலுக்கா மாற்றி எழுதிக்
கொடுத்தால் அனைவரும் சேர்ந்து பாட ஏதுவாக இருக்கும் என்றார்கள்.
நானும்
அதன்படி மாற்றி எழுதிக் கொடுத்தேன். அனைவரும் சேர்ந்து பாடி மகிழ்ந்தார்கள். நீங்களும்
பாடிப்பாருங்கள் தோழ தோழியர்களே !
பொங்கல்
பாடல் ! 2016
மங்கலமாய்ப் பொங்கல் வரும்
பொங்கல் வந்தால் இன்பம் வரும்
இன்பம் வந்தால் அனைவருடன் சேர்ந்திருப்போமே !
துன்பம் துன்பம் என்றே நலிந்திருந்தோம் !
மலரும் இன்பம் என்றே காத்திருந்தோம் ! - 2
துன்பமெல்லாம் வடிந்து விடும்
வடிந்தவுடன் மனம் மகிழும்
மனம் மகிழ்ந்தால் ஒன்று கூடி
தினம் மகிழ்வோமே ! (மங்கலமாய்)
அன்பும் நட்பும் சேர அகம் மகிழும் !
ஒன்றாய்ச் சேர்ந்தே என்றும் நாம் வளர்ப்போம் !
இனிக்கின்ற பொங்கலைப் போல்
வாழ்வினிமை நாம் பெறுவோம்
கூடி நன்றாய்ச் சேர்ந்திருந்து வாழ்ந்திருப்போமே ! (மங்கலமாய்)
நட்பில் ஒரு கலங்கமில்லை !
நாளும் அதில் தீமையில்லை !
கள்ளமில்லா வாழ்வினிலே தோல்வியுமில்லை ! – 2 (மங்கலமாய்)
அன்புடன்
அருணா செல்வம்.
Nice share ...
பதிலளிநீக்குvote +
அட...! அருமையா இருக்குங்க...!
பதிலளிநீக்குபாடல் அருமை சகோ பாடிப்பார்த்தேன் பொருத்தமாக இருந்தது
பதிலளிநீக்குதமிழ் மணம் 4
அருமை சகோ! இனிக்கின்ற பொங்கலைப் போல்
பதிலளிநீக்குஅருமையாக இருக்கிறது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅருமையா வந்திருக்கு பொங்கல் பாடல்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
http://www.ypvnpubs.com/2016/01/01.html