அன்பு விளக்கில் அகமிருக்க,
அனைத்துச்
சொந்தம் சேர்ந்திருக்க,
இன்பம் எல்லாம் நிலைத்திருக்க,
ஏற்றம்
கூடி வலுத்திருக்க,
நன்மை மட்டும் சூழ்ந்திருக்க,
நாளும்
எண்ணம் உயர்ந்திருக்க
என்றும் கிடைக்க வழிசெய்வாள்
இன்று
பிறக்கும் தைமகளே !
நட்புறவுகள் அனைவருக்கும்
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
அருணா செல்வம்.
2016 தைப்பொங்கல் நாளில்
பதிலளிநீக்குகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி காசி ராஜலிங்கம் ஐயா.
ரசித்து படித்தேன் தங்கள் அருமை கவிதையை. பழமையை (தேவையில்லா) பற்றியும் நடுவில் ஒரு வரி எழுதி இருந்து இருக்கலாமே என்று தோன்றியது..
பதிலளிநீக்குதேவையில்லா பழமை இனி ஒழிந்து இருக்க....
பொங்கலோ பொங்கல்.
வணக்கம்
நீக்குநேற்றைய பழமையே
இன்றைய புதுமை
இன்றைய புதுமையே
நாளைய பழமை!
இதில் எதை நான் பழமையாய்க் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை ஐயா.
பிறகு யோசித்து எழுதுகிறேன்.
தங்களின் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி விசு ஐயா.
இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தனபாலன் அண்ணா.
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி குமார்.
வணக்கம் பாவலரே!
பதிலளிநீக்குஇனிய கவிதையுடன் எழுந்துள்ள இந்தத் தைப்புத்தாண்டில் தங்களது பதிவுகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
தங்கட்கும் தங்களின் குடும்பத்தினர்க்கும் எனதினிய தைத்திங்கள் வாழ்த்துகள்.
நன்றி.
வணக்கம் கவிஞர்.
நீக்குநான் எழுத அமர்ந்தால்........ வலி மிகக்கூடாத இடத்திலும் மிகுந்து விடுகிறது.
மெய்யின் இயல்பை மாற்றக்கூடாது அல்லவா?
அதனால்தான் பதிவுகள் வெளியிடவில்லை.
ஆனால் முயற்சிக்கிறேன் ஐயா.
மிக்க நன்றி ஐயா.