அரும்புமீசை ஆணழகன்! ஆசை பொங்க
அழைக்கின்ற கண்ணழகன்! ஏங்க
வைக்கும்
உருவத்தில் கட்டழகன்! எளியோர்க் கெல்லாம்
உதவுகின்ற உள்ளழகன்! தெருவில்
போனால்
திரும்பவைக்கும் நடையழகன்! தீமை என்றால்
திருத்திவிடும் அறிவழகன்! கண்ணால்
பேசிக்
கருத்தாக உள்நுழைந்தான்! கன்னி நானோ
கவிதொடுத்துப் பாடுகின்றேன்! காதல்
கொண்டே!!
(“ போனால் போகிறதென்று காதலனைப் பெண் புகழ்கிற மாதிரி ஒரு பாட்டாவது எழுதக்
கூடாதா...“ என்று மூங்கில் காற்று கேட்டதற்காக போனால் போகிறது என்று எழுதினேன்.
நன்றி)
அருணா செல்வம்.
27.06.2013
நல்ல கவிதை... போனால் போகிறது என்று எழுதியதா?
பதிலளிநீக்குத.ம.2
போனால் போகிறது என்று தான் எழுதினேன்....
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஸ்கூல் பையன்.
போனால் போகிறதென்று என்று எழுதியதே இப்படி அருமையாக இருக்கிறது என்றால்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
உண்மையை எல்லாம் எழுதினால்... பாவம் ஆண்களின்
நீக்குமனம் நோகும் என்று தான் இப்படி...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தணபாலன் அண்ணா.
அட நல்லாயிருக்கே இந்த புகழும் கவிதை!
பதிலளிநீக்குகொஞ்சம் புகழ்ந்ததுக்கே இவ்வளவு சந்தோஷமா...?
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.
இது என்னவோ அந்த காலத்து காதலனைப் பெண் புகழ்கிற மாதிரி இருக்கிறது எங்களுக்கு தேவை இந்த காலத்து காதலனைப் பற்றி பாடுவது மாதிரி வேணும்
பதிலளிநீக்குஎழுதி விட்டால் போகிறது. ஆனால்... யாரும் கோபம் கொள்ளக்கூடாது.
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“
உண்மையாக உங்களவரைப் பாடினால் இப்போதும் தப்பில்லையே
பதிலளிநீக்குஇந்தப் பாடல் என்னவரைப் பற்றிப் பாடியது தாங்க.
நீக்குஆனால்... நாலு வரிதான் மாறிபோச்சு.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.
மொத்தத்தில் இவன் ஒரு சிறந்த அழகன்..
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சங்கவி ஐயா.
கண்ணழகா... பாடலே நினைவுக்கு வருகிறது. சிறப்பு தோழி.
பதிலளிநீக்குஅப்படியா...?
நீக்குநான் அதைக் காப்பி அடிக்கவில்லை சசிகலா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.
அருமை! அவ்வப்போது இப்படி போனால் போகிறதென்றும் எழுதுங்கள்! நன்றி!
பதிலளிநீக்கு(ஆண்களுக்கும் இப்படி எல்லாம் ஆசை வருமா....?)
நீக்குஎழுதுகிறேன் ஐயா.
தங்களின் வருகைக்கும் ஆவலை வெளிபடுத்தியமைக்கும்
மிக்க நன்றி சுரேஷ் ஐயா.
ம். ம்...
பதிலளிநீக்குஅரும்பு மீசக்காரனுக்கு குறும்புப் பெண்ணாள் படித்தகவி அற்புதம் தோழி!
அருமை. ரசித்தேன் மிகவே!
வாழ்த்துக்கள்!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
போனால் போகிறது என்றாலும் தேனாக இனிக்கிறது,கவிதை மானாக,
பதிலளிநீக்குகுதிக்கிறது!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி புலவர் ஐயா.
(அடாடா... இந்த கவிதையால் ஆண்களுக்கெல்லாம்
எவ்வளவு சந்தோஷம்!!!)
போனால் போகிறதுன்னாலும் ஒண்ணுமில்ல.., அண்ணன் மேல உள்ளுக்குள்ள ஆசைதான்.
பதிலளிநீக்குஹி ஹி ஹி... போங்கப்பா.
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ராஜி மேடம்.
பதிலளிநீக்குவணக்கம்!
அரும்பு மீசை ஆணழகன்!
அன்பைப் பொழியும் தேனழகன்!
திரும்பும் திசையில் வந்தொளிரும்
திண்தோள் கொண்ட வானழகன்!
விரும்பும் வண்ணம் கவிபாடி
வியக்க வைக்கும் பாட்டழகன்!
கரும்பும் தோற்கும்! நல்லருணா
கைகள் தீட்டும் கவியிடமே!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி கவிஞர்.
காதல் கொண்டு எழுதிய வரிகளனைத்தும் அருமை தோழி !!!
பதிலளிநீக்குஎன் விருப்பத்திற்கிணங்க பெண் ஆணைப் புகழும்படி எழுதிய கவிதைக்கு நன்றி. கவிதையும் அருமை
பதிலளிநீக்குமகிழ்ச்சிதான் ஆனாலும் ஆண்களைப் பாடும்போது கொஞம் கஞ்சத் தனம் இருக்கத் தான் செய்கிறது
எல்லாவற்றையும் ஒரே கவிதையில் பாடினால் நன்றாக இருக்காது... இன்னும் கரடி, சிங்கம்.... என்றெல்லாம் பாடவேண்டி இருக்கிறது.
நீக்குபிறகு சாவகாசமாக எழுதுகிறேன்.
நன்றி மூங்கில் காற்று.
காதல்கொண்டு பாடிய கவி நன்றாக இருக்கின்றது.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி மாதேவி தோழி.