அன்னை தெரசா
வெண்ணிற உடையினில்
வெண்புறா சாயலில்
வேதவர் உடலுருவம்!
பொன்னிற முகத்தினில்
பொறுமைக்குப் பரிசாய்ப்
பொதிந்திட்ட துகச்சுருக்கம்!
தன்னிரு கைகளும்
தந்திட ஏந்திடும்
தவத்திரு காட்சியெல்லாம்
என்னிரு கைகளும்
இரங்கு வார்க்குதவ
ஏங்குதே என்பதன்றோ!
கருணை மழையினைக்
கண்களால் பொழிந்திடும்
கர்த்தரின் தூதுஇவர்!
பொறுமை என்பதின்
பொருளின் பொருளினைப்
புரிந்திட வைத்தவரே!
அருமைக் குறள்தந்த
அன்பின் பொருள்படி
அமைந்த நற்குணத்தால்
பெருமை என்றுநாம்
பேசிடும் புகழெனும்
பேற்றினும் உயர்ந்தவரே!
பெற்றோர் உற்றோரின்
பற்றினை விட்டவர்
பார்வைக்குப் புனிதமவர்!
கற்றோர் தேடிடும்
கல்வியின் பெருமையின்
கருவாய் இருப்பவரே!
நற்பேர் கொள்வதும்
நாடினோர்க் உதவிடும்
நல்மனம் கொண்டதால்
நிற்பார் நெஞ்சினில்
நலைத்திடும் தியாகத்தின்
திளைத்திடும் தீஞ்சுடராய்!
மண்மேல் வாழ்ந்திடும்
மக்களின் மனத்தினில்
மங்கையர் திலகமவர்!
விண்மேல்
வாழ்ந்திடும்
விண்ணவ தேவர்க்கும்
விளக்காய் இருந்தவரே!
பெண்போல் இருப்பினும்
பெற்ற நற்குணத்தால்
பேசிடும் தெய்வமிவர்!
கண்முன் தெரிந்திடும்
கருத்தினில் புகுந்தநல்
கடவுளின் கடவுளிவர்!!
அருணா செல்வம்.
அன்னையை பற்றி அருமையான கவிதை.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க அருவி கடல்.
சிறப்பான பகிர்வு சகோ...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்... நன்றி...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.
அன்னை தெரசா பற்றிய அழகிய கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க சுரேஷ் ஐயா.
வணக்கம்
பதிலளிநீக்கு(குறள் வெண்பா)
கண்முன் கமழ்ந்த கடவுளின் காட்சியினைப்
பண்முன் படைத்தீா் பணிந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தங்களின் வருகைக்கும் அழகிய வெண்பாவால்
நீக்குபாராட்டியதற்கும் மிக்க நன்றிங்க கவிஞரே.
போற்றுதலுக்குரியவரைப் போற்றி,அனைவரும் போற்றும்படியான ஒரு கவிதையை வடித்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குஎன் மனப்பூர்வ பாராட்டுகள்.
முனைவர் ஐயா...
நீக்குஉங்களனி் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றிங்க ஐயா.
உங்களின் வலை திறப்பதில்லை. சற்று பாருங்கள். நன்றிங்க.
அருமையான கவிதை.கருணை தாய்.
பதிலளிநீக்கு// மண்மேல் வாழ்ந்திடும்
மக்களின் மனத்தினில்
மங்கையர் திலகமவர்!
விண்மேல் வாழ்ந்திடும்
விண்ணவ தேவர்க்கும்
விளக்காய் இருந்தவரே!
பெண்போல் இருப்பினும்
பெற்ற நற்குணத்தால்
பேசிடும் தெய்வமிவர்!
கண்முன் தெரிந்திடும்
கருத்தினில் புகுந்தநல்
கடவுளின் கடவுளிவர்!! //
சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி.
தொடருங்கள் தோழி.
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றிங்க தோழி.
கடவுளின் கடவுள் இவர்..மறுப்பதற்கில்லை, அருமையான கவிதை
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க சகோ...
நீக்குஉங்களின் பதிவை நான் திரும்பவும் படிக்கனும்.
அன்பில்லா மனங்களில்கூட அன்பு வாழ்கிறது உலக மக்களின் அத்தனை மனங்களிலும் !
பதிலளிநீக்குஆமாங்க என் இனிய தோழி ஹேமா...
நீக்குஅவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம்
என்று நினைக்கவும் பெருமையாக இருக்கிறது தோழி.
நன்றிங்க.
உன்மையில் அன்னை தெரேசா ஒரு வியப்பான வித்தியாசமான அன்னைதான்
பதிலளிநீக்குஅழகான வரிகளில் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க சிட்டுக்குருவி.
கடவுளை காட்டியது அருமை
பதிலளிநீக்கு