புதன், 22 ஆகஸ்ட், 2012

தலை(வர்)கள்!! (கவிதை)




நிலைபோல் வாழ்க்கை இருக்குமென்றே
    நிமிர்ந்த நெஞ்சாய் வலம்வருவர்!
விலைபோல் ஏறி இறங்காமல்
    விதியை வெல்வோம் எனநினைப்பர்!
அலைபோல் ஆட்சி வந்துபோயும்
    ஆளும் வழக்கை மாற்றமாட்டார்!
இலைபோல் மரத்தில் தலையசைக்கும்
    இனமாய் நம்மை எண்ணிடுவார்!

மலைபோல் உயர்ந்த மனமுடையோர்
    மறுவி விட்டார் நம்மிடையே!
சிலைபோல் நாமும் நின்றிருந்தால்
    சின்னப் புழுவும் சீறியெழும்!
உலைபோல் கொதித்த மனத்துடனே
    ஒன்றி ஓங்கிக் குரல்கொடுத்தால்
தலைபோல் இருந்த வாலெல்லாம்
    தாவிக் குதித்தே ஓடிவிடும்!!




அருணா செல்வம்.

25 கருத்துகள்:

  1. அருமையான கவிதை.

    அழகாய் முடித்துள்ளீர்கள்.

    தொடருங்கள்.

    என்னுடைய தளத்தில் ஏணிப்படி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க தோழி.

      “ஏணிப்படி” படிக்கிறேன்.

      நீக்கு
  2. சிந்திக்க வைக்கும் கவிதை...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

      நீக்கு
  3. தலைபோல் இருந்த வாலெல்லாம்
    தாவிக் குதித்தே ஓடிவிடும்!!
    //////////////////

    நெத்தியடி செம செம...

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றிங்க நண்பரே.

      வலைதளத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கும்
      மிக்க நன்றிங்க.

      நீக்கு
  5. தலைபோலிருந்த வால்.....இதைவிட வலிக்க அடிக்கமுடியுமோ !

    பதிலளிநீக்கு
  6. தலைபோல் இருந்த வாலெல்லாம்
    தாவிக் குதித்தே ஓடிவிடும்!!//

    நிச்சயாக
    அருமையான இன்றைய நிலைக்கு
    அவசியமான கருத்துடன் கூடிய கவிதை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் ஊக்கம் தரும்
      கருத்தோட்டத்திற்கும் மிக்க நன்றிங்க
      ரமணி ஐயா.

      நீக்கு
  7. நல்லதொரு வரிகள்... அருமை சகோ!

    "அந்தி நேர பூக்கள்" - இது காமக்கதை அல்ல, இருளில் வாழும் விலைமாதர்கள் பற்றிய கதை.
    என் சிறுகதையை படிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன், உங்கள் கருத்துகளையும் பதியவும்! நன்றி

    பதிலளிநீக்கு
  8. தலைபோல் இருந்த வாலெல்லாம்
    தாவிக் குதித்தே ஓடிவிடும்!!


    nice lines

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்

    கலைபோல் கமழும் கவிதைகளை நாளும்
    அலைபோல் தொடா்ந்தே அளி

    கவிஞா் கி.பாரதிதாசன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும்
      அழகிய வெண்பாவால் கொடுத்த வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க கவிஞரே.

      நீக்கு
  10. நாய் போல் வாலாட்டும் நாய்கள் போல்
    நன்றி பாராட்டும் மக்களிடையே
    நன்றி மறந்து நரியை போன்ற நயவஞ்சகர்கள்
    போல் நம்மிடையேபலர் இருப்பதாலன்ரோ
    அனைவரின் நலம் நாடும் தலைவர்களின்
    முயற்சி வீணாகி போகிறதே .வேதனைகள்
    தொடர்கிறதே. என்ன செய்ய?

    காகங்கள் ஒற்றுமையாய் குரல்கொடுக்கும்
    ஒரு கல்லை விட்டாலோ அனைத்தும் ஓட்டமெடுக்கும்

    மனிதர்களிடம் ஒற்றுமையும் இல்லை
    அனைவரும் மனிதர்கள் என்று வேற்றுமை
    பாராது ஏற்றுக்கொண்டு அன்பு பாராட்டும்
    பண்பும் இல்லை.
    என்று திருந்தும் இந்த மனித இனம் ?

    விலை போகும் துரோகிகள் இருக்கும் வரை
    விடுதலை போராட்டம் என்பது பகற்கனவு

    பதிலளிநீக்கு
  11. “விலை போகும் துரோகிகள் இருக்கும் வரை
    விடுதலை போராட்டம் என்பது பகற்கனவு “

    நண்பரே... நம் மக்கள் நாளை கிடைக்கும் பலாக்கனியை விட
    இன்று கையில் கிடைக்கும் சிறிய கலாக்காயே போதும் என்று நினைக்கிறார்கள்... என்ன செய்ய முடியும்?

    ஆழ்ந்து படித்து கருத்தோட்டம் இட்டதற்கும்
    மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு