எண்ணமென்ற கண் !
.
தன்ன தந்த தன்ன தந்த
தன்ன தந்த தந்தானா!
(ஒரு கலைக்கு)
.
அன்னை
யென்று முன்னை யொன்றி
அன்மை யன்றி நின்றேனே!
அன்ன மென்ற வெண்மை கண்டு
மண்ண லென்ற றிந்தேனே !
இன்ன லென்று யின்மை யென்று
மெண்ணி நின்ற யர்ந்தேனே!
எண்ண மென்ற கண்ணி ருந்து
மிங்ங னம்ப யந்தேனே !
மன்ன னுன்றன் மின்னி டும்பொன்
மண்ணி னின்ற செவ்வேலால்
வன்மை யின்ப யம்மி ரண்டு
வன்ந கர்ந்து டன்வாழ்வேன் !
என்ன வென்று கண்ணி லென்று
மெண்ணி யுன்ப தங்காண்பேன் !
எண்ண மென்ற உன்னு யர்ந்த
இம்மை யின்ப முண்பேனோ !
.
பாவலர் அருணா செல்வம்
20.06.2023
அன்மை - தீமை
அண்ணல் - கடவுள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக