.
மார்கழியில்
கொட்டிடும் மத்தளச் சத்தமெல்லாம்
கார்நிறக்
கண்ணணுக் காகவா? - மார்சுமந்த
மன்னவனைத்
தையில் மணமுடிக்க வேண்டிய
இன்ப
முழக்மென எண்ணு!
.
கூடிக்
கலப்பேன் ! 20
.
மார்கழியில்
நோம்பிருக்கும் மங்கையைத் தேடிவந்து
சேர்வராம்
நற்றுணைவர்! செப்பினர்! - ஆர்வலனே!
சூடிக்
கொடுத்தச் சுடர்க்கொடிப்போல் உன்னிடத்தில்
கூடிக்
கலப்பேன் குலைந்து!
.
பழகாத
உள்ளம் ! 21
.
மார்கழியில்
காத்தகோ வர்த்தன மாமலைபோல்
நேர்பேசும்
சொல்மழையை நீதடுத்தால் - பார்பேசும்
பண்புள்ளோன்
என்று ! பழகாத உள்ளமும்
விண்ணளவு
போற்றும் வியந்து!
.
நல்வழி
வாழ்வு !22
.
மார்கழியில்
பாரதப்போர் ! மாண்டாலும் வென்றார்கள் !
போர்வேண்டாம்
பொன்னுயிர்கள் பூக்கட்டும்! - கூர்வாளோ
காயப்
படுத்தியிடும் கட்டளை ! நல்வழியில்
நேயமுடன்
வாழ்வோம் நிலைத்து!
.
நோக்கத்தைக்
காத்தல் ! 23
.
மார்கழியில்
பாற்கடலில் வந்த விடத்தினைச்
சேர்ந்தவர்க்கு
உண்டார் சிவபெருமான் ! - சீர்கவியே
காக்குஞ்
செயல்சிவனுக் கானதில்லை ! நம்பியோரின்
நோக்கத்தைக்
காத்தலும் நோம்பு !
.
சேர்ந்துலா
போவோம் ! 24
.
மார்கழியில்
சொர்க்கத்தின் வாசல் திறந்ததும்
சேர்ந்துலா
போவோம்…வா ! சீருலகில் - ஈர்க்குமிடம்
போக பொருள்வேண்டும் ! பொய்யாம்
நினைவினில்
மேகத்தில்
செல்வோம் மிதந்து !
.
வேந்தனடிப்
பற்று ! 25
.
மார்கழியில்
மின்னிடும் வாதிரை நன்னாளில்
ஓர்குறையும்
வையா தொளிர்ந்திடும் ! சீர்மாந்தர்
சேந்தன்
களியைச் சிவனுண்டார் ! நாமுமந்த
வேந்தனடிப்
பற்றிடுவோம் வீழ்ந்து !
.
பொன்னாள்
எது ? 26
.
மார்கழியில்
பாடிய மங்கையைப்போல் நானுமுன்னை
நேர்வழியில்
பாடி நினைக்கின்றேன் ! ஓர்வழிச்சொல் !
என்கையை
நீபிடிக்க உன்கையை நான்பிடிக்கும்
இன்பமெனும்
பொன்னாள் எது ?
.
நமைச்சேர்ப்பார்
யார் ? 27
.
மார்கழி
மாதம் வரமளிக்கும் என்றெண்ணித்
தீர்மானங்
கொண்டு தினம்போனேன் ! ஓர்நினைவு
மின்றி
அவன்தாள் இணைந்தேன் ! இனிஅவன்
அன்றி
நமைச்சேர்ப்பார் யார் ?
.
மனத்தால்
விளித்தேன் ! 28
.
மார்கழியில்
உன்னை மனதார எண்ணியதால்
சீர்குலைந்த
நெஞ்சால் செயலிழந்தேன் ! நார்போல்
நெளிந்தேன் ! மேனி
வெளிர்த்தேன் ! மனத்தால்
விளித்தேன்
ஒலியிழந்து விட்டு !
.
இல்லறம்
காண்போம் ! 29
.
மார்கழிக்குப்
பின்பு மலர்ந்திடும் தைத்திருநாள் !
சேர்வழிக்
காண்போம் சிறப்புடன் ! யார்த்தடுப்பார் ?
நல்லோர்
நலஞ்செய்ய வல்லோர்கள் வாழ்த்திட
இல்லறம்
காண்போம் இணைந்து !
.
கற்பெனும்
திண்மை ! 30
.
மார்கழி
போனது மங்கலஞ் சேர்ந்தது !
சீர்தாலி
கட்டியெனைச் சேர்த்தணைத்தாய் ! சீர்நிறைந்த
நற்குறள்
சொல்லினைப்போல் நல்லறமாய் வாழ்ந்திடுவோம்
கற்பெனும்
திண்மையைக் காத்து !
.
பாவலர்
அருணா செல்வம்
14.01.2022
மார்கழி என்ற சொல்லில் துவங்கும் முப்பது நேரிசை வெண்பாக்கள் முடிவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக