படிப்போமா… பள்ளியறை
பாடத்தைச் சேர்ந்து
படிப்போம் வா.
பருவத்தில் படித்த படிப்பெல்லாம்
– அந்தப்
பள்ளியறை கற்றுத் தந்த பாடங்கள் !
இருவரும் சேர்ந்து படிப்பதெல்லாம்
– இந்தப்
பள்ளியறை கற்றுத் தரும் பாடங்கள் !
ஒன்றும் ஒன்றும் இரண்டென்று
– அங்கே
ஓதிய பாடம் சொல்லித் தரும் !
ஒன்றும் ஒன்றும் ஒன்றென்றே
– இங்கே
உணர்ந்த நெஞ்சம் துள்ளி வரும் ! (படிப்போமா… )
ஆக்கம் அழிவு எனவுணர்த்தும்
– நல்
ஆற்றல் கொண்டது விஞ்ஞானம் !
ஏக்கம் போக்கி ஆக்கங்களை
– உடன்
இயற்கை யாக்கும் மெய்ஞானம் !
யாரோ வாழ்ந்த வரலாற்றை - நாம்
ஏட்டில் என்றோ படித்துவிட்டோம் !
ஊரே போற்ற வாழ்ந்திடுவோம் ! – அதை
உலகம் படிக்க வைத்திடுவோம் ! (படிப்போமா…
)
தொட்டால் சுடுமெனக் கற்றாலும்
– தீ
சுட்டபின் உண்மை வலியறிவோம் !
எட்டி இருந்தே விட்டாலும்
– வலி
இதயத்துள் இருப்பதை உடனறிவோம் !
ஏட்டில் படித்த அறிவெல்லாம்
– நம்
இளமைப் பருவ அறவழிகள் !
கூட்டில் படிக்கும் படிப்பினையால்
– இன்பம்
கூடும் வாழ்வின் பிறவாழிகள் ! (படிப்போமா…
)
அருணா செல்வம்.
18.11.2015
[[[ஒன்றும் ஒன்றும் இரண்டென்று – அங்கே
பதிலளிநீக்குஓதிய பாடம் சொல்லித் தரும் !
ஒன்றும் ஒன்றும் ஒன்றென்றே – இங்கே
உணர்ந்த நெஞ்சம் துள்ளி வரும் ! ]]
------------------------------------
பள்ளியறைப் பாடல் வேற!
கொஞ்சம் நம் தமிழ் இங்கே!
----ஒன்றும் ஒன்றும் இரண்டென்று – அங்கே
ஓதிய பாடம் சொல்லித் தரும் !
ஒன்றும் ஒன்றும் மூன்றன்றே--மூன்றாவது
பத்து மாதத்தில் துள்ளி வரும் !
______________
இது எப்படி இருக்கு? புலவர் அருணா அவர்களே!
நல்ல பாடல்...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குயாரோ வாழ்ந்த வரலாற்றை - நாம்
ஏட்டில் என்றோ படித்துவிட்டோம் !
ஊரே போற்ற வாழ்ந்திடுவோம் ! – அதை
உலகம் படிக்க வைத்திடுவோம் !
/////////
பாடம் படிச்சதுக்கான முழு பலனும் இப்படி வாழ்ந்தாதான் கிடைக்கும்.
தொட்டால் சுடுமெனக் கற்றாலும் – தீ
பதிலளிநீக்குசுட்டபின் உண்மை வலியறிவோம் !
எட்டி இருந்தே விட்டாலும் – வலி
இதயத்துள் இருப்பதை உடனறிவோம் !/////
இந்த மழையில் இப்படி ஒரு கவிதையா...?இசையோடு பாட நன்று....இணையோடு பாட இன்னும் நன்று...
பாடல் அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசிறந்த பாவரிகள்
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
அருமையான கவிதை! சகோ!
பதிலளிநீக்குகவிதை அருமை அக்கா...
பதிலளிநீக்குஇன்பமான வரிகள்
பதிலளிநீக்குஅருமை.. வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு