புதன், 26 நவம்பர், 2014

நாடோடிப் பாடல்!



கூடிருந்த மரமெல்லாம் குருவி இன்றிக்
   குளமிருந்த கோவிலெல்லாம் தண்ணீர் வற்றி
வீடிருந்த இடமெல்லாம் உயிரும் இன்றி
   விருந்தென்ற சொல்லுக்குப் பொருளும் இன்றி
நாடிருந்த நினைவெல்லாம் நினைவில் சுற்ற
   நானிருக்கும் நிலையினிலே பாடு கின்றேன்!
ஏடிருக்கே! எழுத்தாணி துணையாய் நிற்க
   ஏக்கத்தை அதிலெழுதிப் போக்கு கின்றேன்!

அருணா செல்வம்
26.11.2014

31 கருத்துகள்:

  1. ஏக்கம் போனால் சரி
    கவிதை அருமை
    கீபோர்டு இருக்க கணினித் திரை இருக்க ...
    ஏக்கங்களை பட்டியலிடுக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே செய்கிறேன் சகோ.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. எழுதி எழுதியே ஏக்கத்தை போக்கி கொள்ளுங்கள் சரி ,தூக்கத்தைத் தொலைத்து விடாதீர்கள் :)
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏக்கம் இருந்தால் தூக்கம் வருமா....?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  3. இந்த ஏக்கம் மாறுவதற்கு என்ன வழி? மக்களின் பேராசையும், சுயநலமும் மாறவேண்டும். அழகிய வரிகளில் தங்கள் பலரது மனதைப் பிரதிபலித்துவிட்டீர்கள்! கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரின் மனப்பிதிபலிப்பு தான் இந்த கவிதை!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் அண்ணா.

      நீக்கு

  4. வணக்கம்!

    ஓடோடி வந்தேநான் ஒளிரும் இந்த
       நாடோடிப் பாட்டிதனைப் பாடிப் பார்த்தேன்!
    சூடோடிப் போகாமல் நெஞ்சுக் குள்ளே
       சுவையோடி இறங்குகின்ற இன்பம் கண்டேன்!
    ஆடோடிப் பிடித்ததையும் அமுதப் பாலை
       அருந்தென்று கொடுத்ததையும் மறக்கப் போமோ?
    கேடோடிப் போகாதோ? உயிரைக் கிள்ளிக்
       கிழிக்கின்ற நினைவோடிப் போகா தோ?சொல்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அழகான பாடலுக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தீராத ஏக்கங்கள்.....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  6. பகிர்தல் ஏக்கத்தைக் குறைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. மனிதன் எது மேலும் ஆசைப்படாத வரையில் ஏக்கங்கள் தீராது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. வணக்கம்
    சோகம் நிறைந்த பாடல் படித்த போது ஏங்கியது உள்ளது..
    எனது பக்கம்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பக...:   

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்.

      நேரம் கிடைக்கும் போது உங்களின் கதையைப் படிக்கிறேன். (உண்மையில் நிறைய ஆணி உள்ளது....)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  9. வணக்கம் தோழி !

    அது சரி இது போன்ற பாடல்களை அருமையாகப் பாடிய பின்னர்
    தங்களின் ஏக்கம் நிட்சயம் தணிந்து விடும் ஆனால் எங்களுக்கு ????
    இன்னும் இன்னும் வேண்டும் என்றே இதயம் கேட்கும் ஓசை கேட்கிறதா தோழி ?..
    பாடுங்கள் பாடிக் கொண்டே இருங்கள் என்று மனதார வாழ்த்துகின்றேன் அன்புத்
    தோழியே .வாழ்க தமிழ் .வளர்க தம் பணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட வேண்டும்.
      எனக்காக இல்லை என்றாலும் அடுத்தவர்களின் இன்னலை என் பாட்டில் கொண்டு வைத்தாவது பாட வேண்டும். முடிந்தவரையில் பாடுகிறேன்.
      நன்றி தோழி.

      நீக்கு
  10. எழுத்து ஏக்கத்தை தவிர்க்கட்டும், தொடரட்டும் தங்களின் எழுத்துப்பணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் எழுத்து அடுத்தவரின் ஏக்கத்தையும் தவிர்த்தலே நலம்... இல்லையா கில்லர் ஜி?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  11. ஏடிருக்கே! எழுத்தாணி துணையாய் நிற்க
    ஏக்கத்தை அதிலெழுதிப் போக்கு கின்றேன்!

    நன்று சொன்னாய் அருணா! என் நிலையும் இதுவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்தாணி ஒரு பலம் வாய்ந்த போர்க்கருவி தானே புலவர் ஐயா. நிறைய எழுதுங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  13. கணினியில் எழுதி
    கணத்தக் குறைக்க வேண்டும் வேறு என்ன செய்வது...தொடருங்கள் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுவதே எனக்கு சுகம்.

      கருத்திற்கு மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  14. +1 பாடலுக்கு ஏற்ற படம்! எங்கே தான் உங்களுக்கு இப்படி படங்கள் கிடைக்குதோ!

    பதிலளிநீக்கு