செவ்வாய், 15 ஏப்ரல், 2014

ரஜினியின் பன்ச் பத்து!





1. சாகிற நாள் தெரிஞ்சுட்டா …
    வாழற நாள் நரகமாயிடும். (சிவாஜி)

2. வாழ்க்கையில பயம் இருக்கலாம்.
   ஆனால் பயமே வாழ்க்கையாகிடக் கூடாது. (பாட்ஷா)

3. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. ஆனால்
   கஷ்டப்படாம கிடைக்கிறது
   என்னைக்கும் நிலைக்காது. ( படையப்பா)

4. கெட்டுப் போனவன் வாழலாம். ஆனால் நல்லா வாழ்ந்தவன்       கெட்டுப் போயிடக்கூடாது. (அண்ணாமலை)

5. இந்த உலகத்துல எது எடுத்தாலும்
   ஒண்ணை விட ஒண்ணு பெட்டராகத்தான் தெரியும். (ஜானி)

6. கையளவு காசு இருந்தா அது நம்மளைக் காப்பாத்தும்.
   அதுவே கழுத்து வரை இருந்தா
   அதை நாம காப்பாத்தனும். (எங்கேயோ கேட்ட குரல்)

7. கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.
   கிடைக்காம இருக்கிறது கிடைக்காது. (முத்து)

8. அசந்தா அடிக்கிறது உங்க பாலிஸி.
   அசராம அடிக்கிறது பாபா பாலிஸி. (பாபா)

9. பார்த்து வேலை செய்யுங்கள்.
   பார்க்கும் போது வேலை செய்யாதீங்க. (அருணாச்சலம்)

10. இது எப்படி இருக்கு..... (பதினாறு வயதினிலே)


(சும்மா ஜாலிக்காக எழுதினேன். இதெல்லாம் ஒரு பதிவா என்று யாரும் கல்லை எடுக்க வேண்டாம்.... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்...

அருணா செல்வம்.
16.04.2014

23 கருத்துகள்:


  1. வணக்கம்!

    கல்லை எடுக்க மனமில்லை! நீ..கொடுத்த
    சொல்லைச் சுவைத்தேன் தொடா்ந்து!

    இது எப்படி இருக்கு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ஸ்ஸ்ஸ் ....அப்பா கலக்கல் கவிஞரே

      நீக்கு
    2. சூப்பர். நல்லா இருக்கு!
      அப்பாடா.... நீங்கள் தான் முதல் கல்லை எடுப்பீர்கள் என்று நினைத்தேன். தப்பித்தேன்...
      நன்றி கவிஞர்.

      நீக்கு
    3. தமிழ் பிரியன்..... ஸ்ஸ்ஸ்ஸ்.... எப்பாவுக்கு என்ன அர்த்தம்...?

      முதல் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. 11. நான் ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்காக எல்லாம் நுர்று முறை நன்றி சொல்ல மாட்டேன்.

      நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. அப்பாடி.... ஜெயக்குமார் ஐயா... “சகோதிரியாரே “ என்று எழுதாமைக்கு மிக்க நன்றி.

      அருணா என்றே எழுதினால் மிகவம் மகிழ்வேன்.
      நன்றி அண்ணா.

      நீக்கு
  4. காதலிக்கும் போது பெத்தவங்களை மறந்துரீங்க... காதலிச்ச பிறகு காதலை மறந்துராதீங்க...!

    எப்பூடி...?

    "பன்ச்" எழுதிக் கொடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்ப்ப்ப்ர்!

      நானும் அவர்களை வாழ்த்துகிறேன்.
      நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கிறேன் நட்பே!
      நன்றி.

      நீக்கு
  6. நீ போகலாம்னு சொல்றவன் முதலாளி , வா போகலாம்னு சொல்பவன் தலைவன் ..(கோச்சடையான் )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பன்னிங்க கூட்டமாகத் தான் போகும்.

      நான் சொல்லலை.
      இன்றைய தலைகளை நினைத்தேன்....

      நன்றி ராஜா அவர்களே.

      நீக்கு
  7. எழுதும் திறன் கொண்டவருக்கு எதுவும் பதிவாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் தங்களின் கருத்தை ஆமோதிக்கின்றேன் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பாலசுப்ரமணியம் ஐயா.

      நீக்கு
  8. அருமையான பஞ்ச் பத்து வாழ்த்துக்கள் தோழி .த .ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இதை எழுதிக் கொடுத்தவர்களை நானும் வாழ்த்தகிறேன் தோழி.

      கருத்திற்கு மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. என் தளத்தில் நீங்கள் கருத்திட்டாலும் அதிருது தாங்க பித்தன் ஐயா.

      மிக்க நன்றி.

      நீக்கு
  10. கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு!! ஆ இது எப்டி இருக்கு????

    http://pudhukaiseelan.blogspot.in/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்ப்ப்பர்.
      ஆனால்...
      நல்லவைகள் முடியாமல் தொடரட்டும்.
      நன்றி ஜெயசீலன் ஐயா.

      நீக்கு
  11. பஞ்ச்.... :)

    ரஜினியின் பஞ்ச் இங்கே தொகுப்பாய்...

    நன்றி.

    பதிலளிநீக்கு