மொட்டான
பூவிற்குள்
எத்தனை
மோதல்கள்!
மூச்சு விட
முடியாமல்
முட்டி நிற்கும்
மோகங்கள்!
வாசத்தை
உள் வசமாய்
வைத்திருந்தால்
வண்டிற்கு
வாழ்வேது?
தித்திக்கும்
தேன்சுவை
உன்னுள்ளே
இருப்பதை
உலகறிய
வேண்டாமா?
வார்த்தைகள்
உள்ளிருக்க
வாய் மலர்ந்தாலே
வார்த்தையின்
கரு விளங்கும்!
காய்க்காதப்
பூவிற்கும்
கவர்கின்ற
அழகுதானே
கலைமகளின்
கைவண்ணம்!
கால தேவன்
வரைந்த
ஓவியங்களே!
கவிஞன்
கண்களுக்கு
விலங்கெதற்கு?
கவி பாட
இதழ் திறவுங்கள்!
இனிய ராகம்
இதயத்தில்
ஊறிட
இன்னிசை
மழையில்
இவ்வுலகம்
நனைந்திட
மகரந்தச்
சேர்க்கையை
மன்மதன் புரிந்திட
மறுமலர் மறுபடி
மனம் திறந்தாட
மலர்களே
மலருங்கள்!!
பூவிற்குள்
எத்தனை
மோதல்கள்!
மூச்சு விட
முடியாமல்
முட்டி நிற்கும்
மோகங்கள்!
வாசத்தை
உள் வசமாய்
வைத்திருந்தால்
வண்டிற்கு
வாழ்வேது?
தித்திக்கும்
தேன்சுவை
உன்னுள்ளே
இருப்பதை
உலகறிய
வேண்டாமா?
வார்த்தைகள்
உள்ளிருக்க
வாய் மலர்ந்தாலே
வார்த்தையின்
கரு விளங்கும்!
காய்க்காதப்
பூவிற்கும்
கவர்கின்ற
அழகுதானே
கலைமகளின்
கைவண்ணம்!
கால தேவன்
வரைந்த
ஓவியங்களே!
கவிஞன்
கண்களுக்கு
விலங்கெதற்கு?
கவி பாட
இதழ் திறவுங்கள்!
இனிய ராகம்
இதயத்தில்
ஊறிட
இன்னிசை
மழையில்
இவ்வுலகம்
நனைந்திட
மகரந்தச்
சேர்க்கையை
மன்மதன் புரிந்திட
மறுமலர் மறுபடி
மனம் திறந்தாட
மலர்களே
மலருங்கள்!!
அருணா செல்வம்
மலர்ந்த பூவின் மணம் நுகர்ந்தேன் ,அருமை !
பதிலளிநீக்குத ம 1
இது வாசமில்லா மலராச்சே.... எப்படி?
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பகவான் ஜி.
மணம் மனத்தை கொள்ளை கொண்டது
பதிலளிநீக்குதொடர்ந்து பூக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ஐயோ... ஒரு பூ ஒரு முறை தான் ஐயா பூக்கும்;;;;)
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.
///கவிஞன்
பதிலளிநீக்குகண்களுக்கு
விலங்கெதற்கு?//
அற்புதம்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
tha.ma.4
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நீக்குமலர்ந்தால்தானே வாசம் தெரியும்... மலருங்கள் மலர்களே...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.
ஹஹா மொட்டு மலர்ந்தாச்சு
பதிலளிநீக்குஎப்போ?
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காயத்ரி.
எதைப் பாராட்டுவது...?
பதிலளிநீக்குபடத்தைப் பாராட்டினால் அதை யார் வடிவமைத்துச் செய்தார்களோ அவர்களையே சாரும்.
நீக்குஅவர்களுக்கு என் நன்றியை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.
ஆஹா! மலர்கள் மலர்ந்து மணம் வீசுகின்றன! உங்களுக்குத் தெரியவில்லையா? சகோதரி!
பதிலளிநீக்குஅருமை!
அது அவ்வளவு எளிதாய் இல்லை. அதை மலர வைக்க நான் எவ்வளவு பாட்டு பாட வேண்டி இருந்தது....
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி துளசிதரன் ஐயா.
பதிலளிநீக்குவணக்கம்!
வண்ண மலா்கள் மலரும் கவிபடித்து
எண்ணம் மலரும் எனக்கு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
நீக்குமிக்க நன்றி கவிஞர்.
அருமைங்க..
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி சீனி சகோ.
ஆகா... புய்ப்பம் பத்தி இன்னாமா சொல்லிக்கிற... சோக்கா கீதும்மே...!
பதிலளிநீக்குடாப்புல கீற புய்ப்பம் பிச்சருக்கு சென்டர் ஜஸ்ட்டிபை கவுஜ காம்பு மாறி கீதும்மே... (ஆகா... இன்னா ஒரு கலைக் கண்ணோட்டம்... என்க்குத்தாம்மே...!)
ஆமா நைனா... நாங்கூட இப்பத்தான் பாத்தேன். என்னமா கல கண்ணொட்டம் ஒனக்கு. தலையில சுத்தி போட்டுக்க நைனா...
நீக்குடங்ஸ்ப்பா...
டீச்சர் ஒங்க பேச்ச கேட்டுக்கினு தலைல "சுத்தி" போட்டுக்கினேன்... மண்ட காண்டி வீங்கிப் போச்சு... :-(
நீக்குஅதுக்குதான் நைனா அப்படி சொன்னேன்.
நீக்குநைனா.... எனக்கு சுத்த மெட்ராஸ் டமில் கத்தக்குடுக்கிற வாத்தி நீதாம்பா... என்ன டீச்சர்ன்னு சொல்லாத.
பதிலளிநீக்குகவிஞன்
கண்களுக்கு
விலங்கெதற்கு?
கவி பாட//
ம்
ரசித்தேன்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி முத்தரசு....
மலர்கள் மணத்தன! அருமையான கவிதை! நன்றி!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி சுரேஷ்.
நன்றி ஐயா.
பதிலளிநீக்குகவிதை நன்று
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி முனைவர் ஐயா.
மலரின் நறுமணம்போல கவிதையும் கிறங்கவைக்கிறது. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமலரும் மலர்... உங்கள் கவிதை மலரும் மிக அழகு..... பாராட்டுகள் அருணா.
பதிலளிநீக்குத.ம. +1
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
"வாசத்தை
பதிலளிநீக்குஉள் வசமாய்
வைத்திருந்தால்
வண்டிற்கு
வாழ்வேது?" என்ற அடிகள்
கவிதையின் தரத்தையே உயர்த்துகிறது!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.