வெள்ளி, 7 ஜூன், 2013

திருட்டுக் குட்டி!!


 

திட்டம் போட்டே செய்திட்டாள்.
திறமை யானக் கைகாரி!
சட்டம் என்றே ஒன்றிருந்தால்
சரியாய்ப் பிடித்து வைத்திடுவேன்!

எதிரி எவனும் இருந்ததில்லை.
எதிர்த்தே எவனும் நின்றதில்லை.
கதிரு போன்ற பெண்ணவளோ
கடுதில் நுழைந்த மாயமென்ன?

அஸ்தி வாரம் பலமான
அமைத்து வளர்ந்த தேகமிது!
பஸ்கி குஸ்தி செய்துநன்றாய்ப்
பருவம் மயக்கும் பளிங்கிதுதான்!

நாட்டுக் கோழி நல்லெண்ணெய்
நாளும் உண்டு வளர்த்தவுடல்!
தீட்டும் தமிழை இதயமேந்தித்
திளைத்தச் சுவையால் களித்தவுடல்!

தெள்ளத் தெளிந்தே நானிருந்தேன்!
தெரிந்தே திமிராய் எதிர்வந்தாள்!
கள்ளச் சாவி இல்லாமல்
கண்ணின் வழியில் புகுந்துவிட்டாள்!

கருத்தில் சேர்த்த நான்மறைகள்
கவிக்கே பயின்ற இலக்கணங்கள்
இருட்டில் கலந்த புகைபோல
இருந்த இடமோ தெரியவில்லை!

எதையோ எடுத்துச் சென்றுவிட்டாள்
இதயம் ஏங்கித் தவிக்கிறது!
இதைதான் காணோம் என்றில்லை
இருந்த அனைத்தும் காணவில்லை!

பசிக்க வில்லை! வாழ்க்கையும்
ருசிக்க வில்லை! காட்சிகளை
ரசிக்க வில்லை! கவிதைகளோ
கசிய வில்லை! கலங்குகிறேன்!
 
திருடிச் சென்ற அவளைநான்
தேடித் தேடிப் பார்க்கின்றேன்!
திருட்டுக் குட்டி என்கையில்
திரும்ப கிடைத்தால்... திருவிழாதான்!


அருணா செல்வம்
(மீள்பதிவு)

30 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு
  2. கள்ளச் சாவி இல்லாமல்
    கண்ணின் வழியில் புகுந்துவிட்டாள்!//காதலி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலிதான்.
      நான் என்னை ஆணாக நினைத்து எழுதியக் கவிதை இது. காதலலைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் பெண்கள் ஆண்களாக அரிதாரம் புசிக்கொண்டால் தான் நல்லதாக இருக்கிறது கவியாழி ஐயா.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. நமக்கே தெரியாமல் எதோ நடக்கிறது...!

    அப்படியே திருவிழா எப்படி இருக்கும் என்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்... ஹிஹி... வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....
      அதற்கென்ன? எழுதிவிட்டால் போகிறது.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தணபாலன் அண்ணா.

      நீக்கு
  4. மனசைத் திருடி இப்படிப் புலம்ப விட்டுப் போன அந்தத் திருட்டுக் குட்டியை சும்மா விடக் கூடாது அருணா.... கையில் கிடைத்தால் கைது செய்து ஆயுள் தண்டனையாக மனச் சிறையில் வைத்துப் பூட்டிவிட வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ.... காதலுக்கும் ஆயுள் தண்டனையா...?
      சந்தோஷமான தண்டனைத் தான்.
      ஓகே.. ஓகே... செய்திடலாம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.

      நீக்கு
  5. கருத்தில் சேர்த்த நான்மறைகள்
    கவிக்கே பயின்ற இலக்கணங்கள்
    இருட்டில் கலந்த புகைபோல
    இருந்த இடமோ தெரியவில்லை!//

    மிக மிக அருமை
    குறிப்பாக இருட்டில் கலந்த புகை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. //எதையோ எடுத்துச் சென்றுவிட்டாள்
    இதயம் ஏங்கித் தவிக்கிறது!
    இதைதான் காணோம் என்றில்லை
    இருந்த அனைத்தும் காணவில்லை!

    பசிக்க வில்லை! வாழ்க்கையும்
    ருசிக்க வில்லை! காட்சிகளை
    ரசிக்க வில்லை! கவிதைகளோ
    கசிய வில்லை! கலங்குகிறேன்!//

    உணர்வுகளை எடுத்துச்சொல்லும் அழகிய கவிதை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

      நீக்கு
  7. சரளமாக வந்து விழும் வாழ்த்தைகள் கவிதைக்கு அழகு சேர்த்து விட்டன. மீள பதிவாக இருந்தாலும் மீண்டும் மீதும் படிக்கத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  8. பதில்கள்
    1. போட்டியில் எல்லாம் கலந்து கொள்ளும் அளவிற்கு
      எனக்கு காதலில் அனுபவம் பத்தாதுங்க...

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

      நீக்கு
  9. திருட்டுக் குட்டியை சீக்கிரம் பிடியுங்க அருணா!

    இல்லைன்னா ஃபிரெஞ்சுப் பொலீஸில் கம்ப்ளைன் குடுத்துடுங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வேற....
      எனக்கு.... ஃபிரான்சு போலிஸ் தான் துர்க்கிக்கொண்டு
      போய்விட்டதோன்னு சந்தேகமாக இருக்கிறது!!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மணி ஐயா.

      நீக்கு
  10. அழகு சொல்லில் அற்புதக் கவிதை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஹிஷாலீ அவர்களே...

      (ஆமாம்... இது எந்த நாட்டு பெயர்?)

      நீக்கு
  11. காதல் தேசத்தில் தொலைந்து போனவர்களை தேடி பிடிக்க தனி போலீஸ் படையே அமைத்து விடலாம் கவலைப்படாதீர்கள்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிப்பட்ட தோழி இருக்கும் பொழுது
      நான் என் கவலைப்படனும்...?

      சீக்கிரமாக போலீ(ஸ்) படையை
      அமைத்து விடுங்கள் தோழி.
      நன்றி.

      நீக்கு
  12. காணாமல் போன அனைத்தையும் அவள்தான் கொண்டு போயிருப்பாளோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழி உஷா அவர்கள் அமைக்கும் படையில்
      இதையெல்லாம் சேர்த்துக் கண்டுபிடித்து
      விடலாம் விமலன் ஐயா.

      நன்றி.

      நீக்கு
  13. \\ திருடிச் சென்ற அவளைநான்
    தேடித் தேடிப் பார்க்கின்றேன்!
    திருட்டுக் குட்டி என்கையில்
    திரும்ப கிடைத்தால்... திருவிழாதான்!//

    ஹூம் நடக்கட்டும்...........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுக்கு கும்மாச்சி அண்ணா இவ்வளவு பெரிய பெருமூச்சு...?

      வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  14. இப்படி திருடிச் சென்றுவிட்டாளே!...... :)

    திருவிழா காண திரும்பக் கிடைக்கட்டும் அவள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு