வெள்ளி, 21 ஜூன், 2013

ஒப்பாக எதைச்சொல்வேன்?




 பப்பாளி பழஅழகோ! பட்டு போன்ற
   பஞ்சுமிட்டாய் நிறத்தழகோ! குறளில் சொன்ன
முப்பாலின் பண்பழகோ! மூக்கை முந்தும்
   முல்லைமலர் உடலழகோ! உணவில் போடும்
உப்பான இடையழகோ! உண்மை பேசி 
   ஒளிர்ந்தாடும் கண்ணழகோ! உலகில் உன்னை
ஒப்பாக எதைச்சொல்வேன்? உயர்ந்த எல்லாம்
   தப்பாமல் பெற்றவளே! தவித்தேன் உன்னால்!!

அருணா செல்வம்.
22.06.2013
  

29 கருத்துகள்:

  1. அழகோ அழகு - வரிகள்...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. அழகன் செடியே பெண்ணாக வரையப்பட்டுள்ள படமும் அதற்கு பொருத்தமான கவிதையும் பிரமாதம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க அந்த படமே அழகுதான்.
      இணையத்தில் எடுத்தேன்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  3. உயர்ந்த எல்லாம் தப்பாமல் பெற்றவளுக்கு
    இவ்வுலகில்
    ஒப்பிட்டுப் பேச ஏதுமில்லையம்மா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. சொல்லச் சொல்ல சொல்லிக் கொண்டே போகலாம் போல :)))
    வாழ்த்துக்கள் தோழி உங்கள் கவிதைக்கும் உள்ளது இந்தப்
    பேரழகு !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  6. உயர்ந்த எல்லாம்
    தப்பாமல் பெற்றவளே!
    தவிக்கவைக்கிறாளே தன்னாலே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு

  7. வணக்கம்!

    பப்பாளி என்று படைத்த விருத்தம்!நம்
    முப்பாலில் உள்ள முடிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்(?)
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

      நீக்கு
  9. எப்பாடு பட்டாலும் எட்டாது இவ்வழகு
    இப்பாட்டு தந்த இனிமையோ பேரழகு...

    மிகமிக அருமை! ஓவியமும் காவியமும் அசத்தல்.
    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துப் பாடலுக்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  10. எத்தனை அழகு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. அழகன வருணனை தோழி. வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  12. பப்பாளி.... முப்பாலின்.... உப்பான.... ஒப்பாக.....வாவ்வ்வ்வ்வ் அழகிய மோனைகள்! கவிதை செம கலக்கல்! ஆமா இது விருத்தம் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மணி ஐயா.

      இது எண்சீர் விருத்தம் தான். (ஏன் இவ்வளவு சந்தேகம்?)

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  13. தவிப்புகள் இங்கே முக்கியமாகிப்போகின்றன/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலில் சொதப்புவது எப்படின்னு எல்லாம் தலைப்பில் படம் வருகிறது.
      இது காதலில் தவிர்க்க முடியாத தவிப்பதற்கான கவிதை. ஆனாலும் தவிப்பை இன்னும் விரிவாக எழுதுகிறேன்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விமலன் ஐயா.

      நீக்கு
  14. இப்படி ஒரு அழகியா?கவிதை கலக்கல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி வர்ணித்தாலும் “பெண்கள்“ அழகிகள் தான்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி டினேஷ் சுந்தர் ஐயா.

      நீக்கு