ஆறாம் அறிவு !! (2)
இன்றோ எல்லாம்
மாறியாச்சி!
இயற்கை எதுவும் என்பதாச்சி!
அன்று மனிதன்
பயந்ததினால்
அடிமை என்ற நிலையாச்சி!
நன்றே என்று நல்லறிவை
நாளும் நாமும் கண்டாச்சி!
வென்று வாழ
அறிவிருந்தால்
விதியும் மாறி வெல்லுமாச்சி!
நாளை வருமே
நல்லதென்றே
நாளை எண்ணி கழிக்காமல்
ஆளைக் கூட்டி
அன்றென்றே
ஆலோ சனைகள் செய்துநன்றாய்த்
தோளை நிமிர்த்தித்
தோழமையாய்த்
தூண்டும் அறிவாய்ச் செயல்பட்டால்
வாளைத் தூக்கத்
தேவையில்லை!
வளமாய் வெற்றி நல்கிடலாம்!
நல்ல நல்ல
கருத்துக்கள்
நலிந்தே உள்ள தொன்நூல்கள்!
வல்ல நமது மொழிகளிலே
வடிந்தே ஒழுகும் தேன்பாக்கள்!
வெல்லும் புகழைக்
கூட்டிவிட
விரும்பி படித்துத் தெளிவுற்றும்
அல்லும் பகலும்
ஆராய்ந்தால்
ஆறாம் அறிவைப் பெற்றிடலாம்!
(தொடரும்)
அருணா செல்வம்
அனைத்து வரிகளும் மிக அருமை அதை சொல்லி சென்றவிதமும் அருமை ஆக மொத்தத்தில் உங்கள் கவிதை மிக மிக அருமை
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி “உண்மைகள்“
(உங்களின் வலை துள்ளுகிறது. கொஞ்சம் பாருங்கள்.)
உண்மைதான் தோழி கலந்து பேசி நல்லனவற்றை பிறரின்
பதிலளிநீக்குஒத்துழைப்புடனும் தன் நன் முயற்சியாலும் வெற்றி பெறலாம் !
வாழ்த்துக்கள் சிறப்பான கவிதை இதற்க்கு .
அருமையான கவிதை... இணைக்கப்பட்ட படமும்... வாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தனபாலன் அண்ணா.
////தூண்டும் அறிவாய்ச் செயல்பட்டால்
பதிலளிநீக்குவாளைத் தூக்கத் தேவையில்லை!
வளமாய் வெற்றி நல்கிடலாம்!///
இன்றைக்கு தமிழகத்தில் நடக்கும் சாதிச் சண்டைகள்
எனும் போர்வையில்... சில புல்லுருவிகள் ஆட்டம்
அப்படியே கண்ணுக்குள் வருகிறது..
கத்தியைத் தீட்டாதே...புத்தியைத் தீட்டு...
என்று திரும்பவும் சொல்லவைக்கிறது கவிதை..
அருமை அருமை..
வாழ்த்துக்கள் சகோதரி...
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி மகி அண்ணா.
இன்றோ எல்லாம் மாறியாச்சி!
பதிலளிநீக்குஇயற்கை எதுவும் என்பதாச்சி!//இயற்கையாய் இல்லை என்பதாச்சி.வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்வதும் ஒரு வகையில்
நீக்குஉண்மைதான் கவியாழி ஐயா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.
அருணா என்ற ஆதவனே(ளே)
பதிலளிநீக்குஅனைவரும் ஆறறிவு கண்டிடவே
பதமாய் நல்ல பாக்களினால்
பண்புடன் பகர்ந்தாய் பலவழியே!
கூறு போட்டு குறைகள்காணா
கூடிவாழ்தல் மேன்மை என்றே
சீரும் பெறச் சிறுமையொழிய
யாவருமுணர கூறினாய் நன்றே!...
மிக மிக அருமை உங்கள் பாக்கள். அதனூடு சொன்ன நற்பண்புகள் அனைத்தும் சிறப்பு.
வாழ்த்துக்கள் என் தோழி புலவர் அருணா செல்வமே!
த ம 6
தங்களின் வருகைக்கும் அழகிய பாடலுக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
நாளை நாளை என்று காத்திருக்காமல் இன்றே இப்போதே செயலில் இறங்கினால் வெற்றிதான்! அருமை !
பதிலளிநீக்குத.ம-7
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி உஷா.
\\ நல்ல நல்ல கருத்துக்கள்
பதிலளிநீக்குநலிந்தே உள்ள தொன்நூல்கள்!
வல்ல நமது மொழிகளிலே
வடிந்தே ஒழுகும் தேன்பாக்கள்!
வெல்லும் புகழைக் கூட்டிவிட
விரும்பி படித்துத் தெளிவுற்றும்
அல்லும் பகலும் ஆராய்ந்தால்
ஆறாம் அறிவைப் பெற்றிடலாம்!//
ஆறாம் அறிவைப் பெற நல்ல வரிகள். வாழ்த்துகள் அருணா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.
அருமையான வரிகள்! சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சுரேஷ் ஐயா.
சிறப்பான சிந்தனை வரிகள்.தொடரக் காத்திருக்கிறேன்
பதிலளிநீக்கு..விரும்பி படித்துத் தெளிவுற்றும்
பதிலளிநீக்குஅல்லும் பகலும் ஆராய்ந்தால் ... ..." உண்மைதான் வெற்றி கிடைப்பது நிட்சயம். அருமை.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி மாதேவி தோழி.
நல்லது.
பதிலளிநீக்குநன்றி.