செவ்வாய், 26 மார்ச், 2013

தூது போவாய் அன்னமே..!! (கவிதைக் கதை)



வளம்கொழித்த இளம்மங்கை! நிலவின் வண்ணம்!
     வதனமுகம் கொண்டயிவள் எண்ணம் என்ன?
களம்கொழித்த நாட்டைவிட்டு நம்மை நாடி
     கயல்துள்ளும் குளக்கதைக்கு வந்த தேனோ?
இளம்மனது கொண்டஅந்த வெள்ளை அன்னம்
     “ஏனிந்த  இன்முகத்தில் வாட்டம் என்றே
விளக்கிவிடு! உன்துயரம் போக்க நானும்
     விழைக்கின்றேன் அழகுபெண்ணே!“ என்ற(து) அன்னம்!

உண்மைநிறம் கொண்டநல்ல வெள்ளை அன்னம்
     உதவிக்கு வருதென்றே அறிந்த நங்கை
“கண்சிறைக்குள் நுழைந்துவிட்ட காதல் கள்வன்
     கற்பென்ற திண்மைதன்னை அழித்து விட்டான்!
பெண்நிலையென் மாற்றத்தைக் கண்ட பெற்றோர்
     பேசுகின்றார் மணமுடிக்க வேற்றான் தன்னை!
பண்பற்று போனதில்லை என்தன் உள்ளம்
     பாவைஉயிர் போவதற்குள் போய்சொல்“ என்றாள்.

வஞ்சிசொன்ன காதலினைக் கேட்ட அன்னம்,
     வலிகொடுத்த வேதனையை தன்னில் ஏற்று
“நெஞ்சிநிறை கொண்டதுந்தன் நேர்மை காதல்!
     நெடுந்தூரம் என்றாலும் போவேன் தூதாய்!
அஞ்சிநீயே அழிந்திடாதே! உண்மை காதல்
     அகிலமுள்ள வரையினிலே நிலைத்தி ருக்கும்!
கொஞ்சகாலம் பொறுத்திருப்பாய்! கோதை உன்னை
    குழைந்தழைப்பான் என்றுசொல்லி போன(து) அன்னம்!!

அருணா செல்வம்.
26.03.2013

நட்புறவுகளுக்கு வணக்கம்.
     நண்பர் நாகராஜ் ஜி கொடுத்தப் படத்திற்கு என் சிறுமூளைக்கு எட்டிய வரையில் கவிதையில் கதைபோல் எழுதியுள்ளேன். படத்தைக் கொடுத்து அவரவர்களின் விருப்பம் போல் எழுதிக் கொள்ளச் சொன்ன நாகராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி. இதுபோல அவருக்கு ஒரு சிந்தனை வந்ததால் தான் என் போன்றோர்கள் கொஞ்சமாவது இப்படி யோசித்து எழுத முடிகிறது. அவரின் இந்த வித்தாசமான பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி நாகராஜ் ஜி.

நட்புடன்
அருணா செல்வம்.
    
 
    

32 கருத்துகள்:

  1. “நெஞ்சிநிறை கொண்டதுந்தன் நேர்மை காதல்!
    நெடுந்தூரம் என்றாலும் போவேன் தூதாய்

    இவ்வரிகள் போதும் உங்கள் கவிதை எத்துனை சிறப்பானதாய் அமைந்ததென கூற ... அருமை படைப்பு அருணா அவர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் ஆழ்ந்து படித்துக்
      கருத்திட்டமைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுகுமார் ஐயா.

      நீக்கு
  2. நல்ல கவிதை படைத்த உங்களுக்கு வாழ்த்துகள் அருணா. எனது பக்கத்திலும் ஒவ்வொன்றாய் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதே வரிசையிலும் உங்கள் கவிதையும் சில நாட்களில் வரும்!

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      உங்களின் மலர் கொத்துக்காக காத்திருக்கிறேன்.
      நன்றி.

      நீக்கு
  3. நான் என்ன எழுதியிருப்பேன்?

    நீ ஸ்பரிசித்தாய்
    வண்ணம் பீறிட்டது அன்னத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவி சார் ஹைகூவில் உங்களை மிஞ்ச முடியுமா...?

      நான் கஷ்டப்பட்டு யோசித்து யோசித்து இவ்வளவு
      வார்த்தைகள் கொண்டு எழுதி இருக்கிறேன்.
      நீங்கள் என்னவென்றால் இரண்டே வரிக்குள்
      கருத்தைக் கொண்டு வந்துள்ளீர்கள்.
      வாழ்த்துக்கள் கோவி சார்.

      தங்களின் வருகைக்கும் அழகிய ஹைகூவிற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. அன்புத்தோழி அருணா செல்வம்!.

    அன்னம் போல அழகாக அமைந்த வார்தைகள்,வரிகள், பாக்கள்!
    மிகமிகச்சிறப்பு. வாழ்த்துக்கள்!!!

    அன்னம் சுமந்த காதல்தூது
    எண்ண இனிதாய் இருக்கிறதே
    அழகாய்த் தூது அனுப்பியஉனை
    புகழவார்த்தை தேடுகிறேன்
    அருமையென்று உன்கவியை இங்கு
    சொன்னால் மட்டும் போதிடுமோ
    பெருமை மிகவாயுள்ளதென்பேன்
    கனிவாய்த் தந்தஉன் கவியாலே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அழகான கவிதையுடன்
      அமைத்த வாழ்த்திற்கும் மிக்க நன்றி இளமதி தோழி.

      நீக்கு
  5. அருமயான கவிதை தொடரடடும் உங்க கவிதைப்பணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி எழிலன் ஐயா.

      (எங்கே உங்களை ரொம்ப நாளாக வலைப்பக்கம் காணோம்?)

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு
  7. பதற்கேற்ற அருமையான அற்புதமான கவிதை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  8. கவிதையில் ஒரு கதை...

    /// உண்மை காதல் அகிலமுள்ள வரையினிலே நிலைத்திருக்கும்... /// என்று அன்னம் மூலம் வரிகள் அருமை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  9. இப்பொழுதுதான் உங்கள் நாடக கவிதையைக் கண்டேன்.
    என்ன ஒரு காவிய ஓவியம் என நினைத்தேன்.

    அன்னம் வருவதும்
    அழகி ஏங்குவதும்
    அன்னம் அருகிலே வந்து என்ன எனக் கேட்பதும்
    அழகி அழகன் ஆட்டிவைத்த நிலைதனை சொல்வதும்
    அடுத்து என்ன நிகழும் எனச்சொல்லி தூது அனுப்புவதும்
    அன்னம் அழேல் என்றுரைப்பதும்
    அக்கணமே தூது செல்வதும்

    அபாரம்.

    அருணா செல்வம் சாரே !! உங்கள் இ மெயில் தெரியவில்லை.
    அடுத்தடுத்த காட்சிகளை யான் பாடி இருக்கிறேன்.
    உங்களுக்கு அனுப்பவா ?

    சுப்பு தாத்தா.

    பி. கு: இந்தக் கவிதைக்கு முன்னால் என்னோடது எல்லாம் நிற்கக்கூட முடியாது.
    டெபாசிட் போயிடும்.
    அம்பேல் என்று வித்ட்ராயல் டேட்டுக்கு முன்னாடி நாமினேஷனை திருப்பி வாங்கிடவேண்டியது தான்.
    வெங்கட நாகராஜ் அவர்களே !! வாட் இஸ் த லாஸ்ட் டேட் ஃபார் வித்ட்ராயல் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுப்பு தாத்தா.

      உங்களின் கவிதையை வெங்கட் நாகராஜ் ஜியின்
      வலையில் படித்தேன்.
      நன்றாக இருந்தது.

      என் மின் முகவரி. avvaipaatti@live.fr


      நீக்கு
  10. இப்பொழுதுதான் உங்கள் நாடக கவிதையைக் கண்டேன்.
    என்ன ஒரு காவிய ஓவியம் என நினைத்தேன்.

    அன்னம் வருவதும்
    அழகி ஏங்குவதும்
    அன்னம் அருகிலே வந்து என்ன எனக் கேட்பதும்
    அழகி அழகன் ஆட்டிவைத்த நிலைதனை சொல்வதும்
    அடுத்து என்ன நிகழும் எனச்சொல்லி தூது அனுப்புவதும்
    அன்னம் அழேல் என்றுரைப்பதும்
    அக்கணமே தூது செல்வதும்

    அபாரம்.

    அருணா செல்வம் சாரே !! உங்கள் இ மெயில் தெரியவில்லை.
    அடுத்தடுத்த காட்சிகளை யான் பாடி இருக்கிறேன்.
    உங்களுக்கு அனுப்பவா ?

    சுப்பு தாத்தா.

    பி. கு: இந்தக் கவிதைக்கு முன்னால் என்னோடது எல்லாம் நிற்கக்கூட முடியாது.
    டெபாசிட் போயிடும்.
    அம்பேல் என்று வித்ட்ராயல் டேட்டுக்கு முன்னாடி நாமினேஷனை திருப்பி வாங்கிடவேண்டியது தான்.
    வெங்கட நாகராஜ் அவர்களே !! வாட் இஸ் த லாஸ்ட் டேட் ஃபார் வித்ட்ராயல் ?

    பதிலளிநீக்கு
  11. தலைப்பே கதை சொல்லி விட்டதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பிரேம்.

      நீக்கு
  12. நீங்களும் தூது விட்டு விட்டீர்களா !...வாழ்த்துக்கள் தோழி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      உங்களின் துர்தும் நன்றாக இருந்தது.

      நீக்கு
  13. அஞ்சிநீயே அழிந்திடாதே//என்ன வரிகள்.அருமை கதையா,கவிதையா? எப்படிப்பார்த்தாலும் இலக்கியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு

  14. வணக்கம்!

    அன்னத்தின் துாதறிந்தேன்! அன்பூறும் பெண்ணவளின்
    எண்ணத்தின் துாதறிந்தேன் இங்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கவிஞர்!

      குறளில் இனிமை கொடுத்தக் கவியே
      பிறவிபயன் பெற்றேன் மகிழ்ந்து.

      நன்றி.

      நீக்கு
  15. நெஞ்சிநிறை கொண்டதுந்தன் நேர்மை காதல்!
    நெடுந்தூரம் என்றாலும் போவேன் தூதாய்!
    அஞ்சிநீயே அழிந்திடாதே! உண்மை காதல்
    அகிலமுள்ள வரையினிலே நிலைத்தி ருக்கும்!

    உண்மை காதல் பொருள் உரைத்த அருமையான வரிகள் ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  16. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
    மிக்க நன்றி டினேஷ்சாந்த் ஐயா.

    பதிலளிநீக்கு