பொதுவாக நிறைய பெண்களுக்கு முப்பத்தைந்து
வயதிற்கு மேல் கருபப்பையில் கட்டிகள் தோன்றுகின்றன. முப்பத்தைந்து வயதிற்கு மேல்
உள்ள நாறு பெண்களைச் சோதனை செய்து பார்த்தால் அதில் எண்பது சதம் பெண்களுக்குக்
கருப்பையில் கட்டிகள் இருக்கும்.
இக் கட்டிகளில் இரு வகை உண்டு.
பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்திற்கு அறிகுறியாகத் தோன்றும் கட்டிகள். (fibromes)
அடுத்தது கேன்சர் கட்டிகள்.
முதலில் கர்பப்பையில் வரும் சாதாரணக் கட்டிகளைப்
பற்றிப் பார்ப்போம்.
இந்தக் கர்பப்பைக் கட்டிகளால்
உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை.
இந்தக் கட்டிகள் பிற்காலத்தில் கேன்சராகவும் மாறாது என்பது மனத்திற்கு ஆறுதல்
தான்.
இக்கட்டிகள் வந்ததற்கான அறிகுறிகள்
என்னவென்றால்
1.
- மாதவிடாய்க் காலத்தில் அடிவயிற்றில் வலி அதிகமாக
இருக்கும்.
2.
- அதிக உதிரப்போக்கு இருக்கும். பொதுவாக நான்கு
ஐந்து நாட்கள் என்று இல்லாமல் பத்து நாட்களுக்கு மேலும் நீடிக்கும்.
3.
- உணவு உண்டதும் வயிறு உப்பிவிட்டது போன்ற உணர்வு
வரும்.
4.
- உடம்பு திடீரென்று உஷ்ணமாகி சட்டென்று
வேர்க்கும்.
5.
- அதிக உதிரப்போக்கு ஏற்படுவதால் இரத்தில் சிகப்பு
அணுக்கள் நாளடைவில் குறைந்து விடும். அவ்வாறு குறைவதால் இரத்த சோகை நோய் ஏற்படும்.
6.
-உடலும் முகமும் ஊதிவிடும்.
ஒரு சிலருக்கு இக்கட்டிகள்
இருந்தாலும் இந்த பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. அவர்கள் கட்டியிருந்தாலும்
எப்பொழுதும் போலவே இருப்பார்கள்.
ஆனால் மேற் சொன்ன அறிகுறிகள்
இருப்பவர்களுக்கு அக்கட்டிகளை அறுவை சிகிட்சை செய்து அகற்றி விடவே மருத்துவர்கள்
ஆலோசனைத் தருகிறார்கள். மற்றபடி அந்தக் கட்டிகளைப் போக்க எந்த மருந்தும் இல்லை.
சாதாரண வலி நிவாரணி மருந்துக்களைத் தான் மருத்துவர்கள் கொடுக்கிறார்கள்.
அந்த மருந்துகளால் அந்த நேரத்தில்
அறுதலே தவிர முழு நிவாரணம் கிடைக்காது.
அப்படிக் கட்டியிருந்து அறுவை
சிகிட்சை மேற்கொண்டு கட்டிகளை எடுத்துவிட முடிவு செய்தால் அவசியமாக கர்பப்பையை
ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு அறுவை சிகிட்சைக்கு ஒப்புக்கொள்வது நல்லது.
காரணம், கருப்பையில் உள்ள கட்டிகளை மட்டும் எடுத்துவிட்டு கருப்பையை
எடுக்காமலேயும் விட்டுவிடலாம். ஆனால் சில நேரங்களில் கட்டிகளால் கருப்பையும்
அழற்சிக்குள்ளாகி விடுகிறது. அப்படி கருப்பை வீணாகி விட்டிருந்தால் கருப்பையையும்
எழுத்துவிடுவே நல்லது.
ஏன் ஸ்கேன் பார்க்கவேண்டும் என்றால்
சாதாரண எக்கோ கிராபியில் கருபப்பை அழற்ச்சி தெரியாது. அப்படி கவனிக்காமல் கட்டியை
மட்டும் எடுத்துவிட்டு கருப்பையை விட்டுவிட்டால் மீண்டும் கட்டிகள் தோன்ற வாய்ப்பும்
உள்ளது. அழற்சியான கருபப்பையால் வலியும் முழுமையாகப் போகாது.
ஸ்கேன் பார்த்து கருபப்பை நன்றாக
இருக்கிறது என்று நிச்சயமாகத் தெரிந்தால் கட்டியை மட்டும் அறுவை சிகிட்சையின்
மூலம் எடுத்துவிடலாம்.
தவிர... கருப்பையில் கேன்சர்
கட்டிகள் இருந்தால் எந்த வித தாமதமும் இன்றி உடனடியாக அறுவைசிகிட்சை மூலம் கருபப்பையை
எடுத்துவிடுவதே உயிருக்கு ஆபத்தில்லாம் இருக்கலாம்.
கருப்ப்பையில் மட்டுமல்லாமல்
பெண்களின் வயிற்றில் மற்ற இடத்திலும் இக்கட்டிகள் தோன்றுகிறது. இதனால் பெரிய
பாதிப்பு எதுவும் வருவதில்லை.
இக்கட்டிகள் வரக்காரணம்... பெண்களுக்குப்
பலமுறை கருச்சிதைவு செய்திருந்தால் இந்தப் பிரட்சனைகள் வரலாம். ஆனால் இதை மட்டும்
காரணம் என்றும் சொல்ல முடியாது. கல்யாணமே செய்துக் கொள்ளாமல் தனிமையில் இருக்கும்
சில பெண்களுக்கும் இந்தக் கருப்பைக் கட்டிகள் தோன்றியிருக்கிறது. அதனால்
இக்கட்டிகள் வர சரியான காரணத்தைச் சொல்ல முடிவதில்லை.
இந்தப் பிரட்சனைகளில் இருந்து
தப்பிக்க பெண்கள் தங்களின் முப்பது வயதிற்கு மேல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை
அவசியம் மருத்துவரிடம் சென்று தன்னைப் பரிசோதித்துக் கொள்வதே சாலச்சிறந்தது.
அருணா செல்வம்.
பெண்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே தேவையான விழிப்புணர்வு பதிவு! நன்றி!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி சுரேஷ் ஐயா.
பயனுள்ள நல்ல தகவல்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி செய்தாலி ஐயா.
நல்ல ஆலோசனை!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி புலவர் ஐயா.
மிகவும் உபயோகமான செய்தி.
பதிலளிநீக்குநன்றி தோழ்மையே!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழரே.
பயனுள்ள மருத்துவ ஆலோசனைகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.
nalla pakirvu sako..!
பதிலளிநீக்குபெண்களின் உடலில்தான் எத்தனை மாற்றங்கள். அதில் எத்தனை பிரச்சனைகள் தோன்றுகின்றன. பல நல்ல தகவல்கள் தந்திருக்கிறீர்கள். நன்றி.
பதிலளிநீக்குஆமாம் நண்பரே....
நீக்குஇதனால் தான் பெண்களாகப் பிறக்கக்கூடாது என்று
பெண்களே சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.
அட... அருணாவின் தளத்தில் மருததுவக் கட்டுரை கூட... மிகமிகப் பயனுள்ள பகிர்வு. நன்று.
பதிலளிநீக்கு“களவும் கற்று மற“ என்றார்கள் பெரியவர்கள்.
நீக்குநான் நல்லதைக்கூட உடனே மறந்துவிடுவேன்.
அது தான் இது பற்றி தோழியிடம் பேசியதும்
மறந்திடாமல் வலையேற்றி விட்டேன்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
பதிலளிநீக்குமிக்க நன்றி தோழி.
பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. பல பெண்களுக்கு இந்த ஃபைப்ராய்ட்ஸ் பிரச்சனை இப்போது வருகிறது.....
பதிலளிநீக்குஆமாங்க... எனக்குத் தெரிந்தே
நீக்குநிறைய பெண்களுக்கு இந்தப் பிரட்சனை இருக்கிறது.
இதைப் படித்தாவது... அல்லது படித்தவர்கள் தனக்குத்தெரிந்த
பெண்களிடம் சொன்னாலும் அவர்கள் முன் எச்சரிக்கையாக
இருப்பார்கள் என்ற எண்ணத்தில் எழுதினேன்.
நன்றி நாகராஜ் ஐயா.
வந்து பார்த்தேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோ மேடம்.
நல்ல செய்தி சொல்லியிருக்கிறீர்கள்.நிச்சயம் பலபேருக்குப் பிரயோசனப்படும் !
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.பகிர்வுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்கு