நட்புறவுகளுக்கு வணக்கம்!
இந்த ஜனவரி மாதம் பிரான்ஸ்
குறளரங்கத்தில் கொடுக்கப்பட்டத் தலைப்பு ”நம்பிக்கை“
நான்,
மற்றவிடத்தில் வைக்கும் நம்பிக்கையை விட தன்மேல் நம்பிக்கை வைத்தால் எதையும்
அடையலாம் என்னும் பொருளில், கவிதை
எழுதினேன். இந்தக் கவிதையின் உட்பொருள் அனைவருக்கும் பிடிக்கும் என்ற “தன்னம்பிக்கை“
யுடன் உங்களுக்குப் படைக்கிறேன்.
நம்பிக்கை !!
நமக்கோ ஏதும்
வேண்டுமென்றால்
நம்பி கேட்போம் கடவுளிடம்!
தமக்கோ இதுதான்
வேண்டுமென்று
தானாய்க் கடவுள் கேட்டதில்லை!
எமக்கோ இதைநீ
செய்துவிட்டால்
இதனை உனக்கு தருவதுவாய்
நமக்கே கொடுக்கும்
கடவுளுக்கே
நாமாய்த் தருவோம் இலஞ்சத்தை!
நம்மின் மீதே முழுதான
நம்பிக் கையை அற்றதினால்
எம்மண் காக்கும்
கடவுளிடம்
எளிதில் பேரம் பேசுகிறோம்!
வம்பில் மாட்டிக்
கொண்டாலோ
வகையாய் வெளியே வருவதற்கு
தம்மின் திறத்தை ஆராய
நம்மின் அறிவால் யோசிப்போம்!
அன்பை, அறிவை, ஆற்றலையும்
அன்னை தந்தை பாசத்தையும்
பொன்னைப், பொருளைப், பணத்தினையும்
பொளிரும் அழகாய்ப் பூவுடலும்
இன்மை மறுமை
வாழ்விற்கும்
இயன்ற பெருமை பெற்றிருந்தும்
தன்மேல் நம்பிக்
கையிழந்தால்
நாளும் வாழ்வில் துன்பம்தான்!
எம்பி குதித்தும்
கிடைக்காமல்
இந்தப் பழமோ புளிக்குமென்று
வெம்பி போன நரிகதையோ
விவேகம் அற்ற நீதியது!
நம்மின் பிள்ளை
தன்மேலே
நம்பிக் கையை வளரவைத்தால்
அம்மை அப்பன்
அளித்திட்ட
அறிய சொத்தாய் அதைநினைப்பான்!
தன்..கை தானே
எப்பொழுதும்
தனக்கே உதவி என்பார்கள்!
முன்னால் கையைக்
மூடிவிட்டு
முயற்சி இன்றி நின்றிருந்தால்
என்றும் முடிவை அறியாதே!
எதையும் முயன்றால் முடித்திடலாம்
என்றே நம்பிக்
கைவைத்தால்
இமயம் கூட தொட்டிடலாம்!
அருணா செல்வம்.
muyarchi ....
பதிலளிநீக்குunmaithaan sako...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சீனி ஐயா.
//
பதிலளிநீக்குதன்மேல் நம்பிக் கையிழந்தால்
நாளும் வாழ்வில் துன்பம்தான்!
//
10000% உண்மை , சரி
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ராஜா அவர்களே.
இன்று
பதிலளிநீக்குவிஸ்வருபம் தடை சரியா தவறா ? மாபெரும் கருத்து கணிப்பு
படித்துவிட்டேன்.
நீக்குமீண்டும் நன்றி.
நம்பிக்கையே தும்பிக்கை... வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
///நமக்கோ ஏதும் வேண்டுமென்றால்
பதிலளிநீக்குநம்பி கேட்போம் கடவுளிடம்!
தமக்கோ இதுதான் வேண்டுமென்று
தானாய்க் கடவுள் கேட்டதில்லை!///
ஆரம்பமே அருமையாக ஆரம்பித்து இருக்கிறீர்கள். கவிதை அருமை
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி “உண்மைகள்“
நம்பிக்கையே வாழ்க்கை!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி குட்டன் ஐயா.
முயற்சி இன்றி நின்றிருந்தால்
பதிலளிநீக்குஎன்றும் முடிவை அறியாதே!//
உண்மை முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி கவியாழி ஐயா.
முன்னால் கையைக் மூடிவிட்டு
பதிலளிநீக்குமுயற்சி இன்றி நின்றிருந்தால்
>>
சிறு துரும்பையும் அசைக்க முடியாது
செம நச் கவிதை பகிர்வுக்கு நன்றி சகோ
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குவாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி.
''..தன்..கை தானே எப்பொழுதும்
பதிலளிநீக்குதனக்கே உதவி என்பார்கள்!
முன்னால் கையைக் மூடிவிட்டு
முயற்சி இன்றி நின்றிருந்தால்
என்றும் முடிவை அறியாதே...''
மிக நன்று அருணா.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கோவைக்கவி அவர்களே!
பதிலளிநீக்குதமிழ்மணம் 4
கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.
நீக்குபாட்டிற்(கு) எதுவும் பதிலிடாமல் வெல்வதற்கு
ஓட்டுமட்டும் போட்டீரோ? நன்று!
நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்.... உண்மை தான்.
பதிலளிநீக்குஅருமையான கவிதை. பாராட்டுகள். தேர்ந்தெடுத்த படமும் அருமை.
த.ம. 5
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
படம் இணையத்திலிருந்து எடுத்தேன். (சுட்டேன்)
நன்றாகவும், கருத்தாகவும் உள்ளது...
பதிலளிநீக்குஇணைத்துள்ள படமும் மிகவும் நேர்த்தியானத் தேர்வு...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி நண்பரே!
படம் இணையத்திலிருந்து சுட்டேன்.
முன்னால் கையைக் மூடிவிட்டு
பதிலளிநீக்குமுயற்சி இன்றி நின்றிருந்தால்//
உண்மைதான்.முடியும் என்று முயற்சித்தால்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி கவியாழி ஐயா.
தொடும்வரைதான் இமயம் தொட்டுவிட்டால் இதயம் - தன்னம்பிக்கையுடன் முயன்றால் வானம் வசப்படும்....நல்ல கவிதை வரிகள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி முத்தரசு மனசாட்சி.
அன்னப்பறவைப் போல் பிற்போக்குத் தனங்களை தவிர்த்து இலக்கணம் மட்டும் கற்று வெளிவந்து பகுத்தறிவின் உச்சத்தினை பட்டும் படாமல் தன்னம்பிக்கை எனும் கவிதை ஊடாக படித்து கடவுளுக்கே லஞ்சம் கொடுக்கும் கயவர்களுக்கு பளார் என்று செவிட்டில் ஓங்கி விட்ட அரை அபாரம் அபாரம்.
பதிலளிநீக்குஇன்னும் கொஞ்சம் மேலே சென்று இந்த பகுத்தறிவினை வரும் சந்ததியினருக்கும் கொண்டு செல்ல நினைத்தது அழகோ அழகு, உங்களைப்போல்.
இன்னும் கொஞ்சம் போனல் உங்களுக்கு நான் ரசிகர் மன்றமே தொடங்கிவிடுவேன் போலிருக்கிறது. சபாஷ் ....
அட நான் தாங்க ....
அட நான் தாங்க அவர்களுக்கு....
நீக்குநான் பகுத்தறிவை எல்லாம் கவிதையில் புகட்டவில்லை. ஏன் என்றால் எனக்கும் இன்னும் எதையும் பகுத்து அறிய தெரியவில்லை.
நான் சொல்ல வந்தது... ஏதோ ஒருவரை நம்பினாலும் தன்மேல் நம்பிக்கை வைத்து முயற்சிக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் எந்த காரிய சித்தியையும் அடைய முடியாது என்பதே...
எனக்கு திருக்குறள் 1330 குறளில் பிடித்தக்குறள்
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். -619
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
(எனக்கு ரசிகர் மன்றம் திறந்தால் யார் தலைவர்...? முதலில் உங்கள் முகத்தை காட்டுங்கள்)
அருமை..வாழ்த்துக்கள் அருணா
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஆதிரா.
தன் நம்பிக்கை தரும் கவிதை அருமை.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
Nice..கவிதை பல நேரங்களில் இலகுவாய் பாடலாயும் அமையும்படி எழுதுவது உங்கள் தனித்துவம்...வாழ்த்துக்கள் அருணா...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ரெவெரி சார்.
நம்பிக்கை கவிதை அசத்தல்.
பதிலளிநீக்குத,ம.9
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி!
யானையின் நம்பிக்கை எது தும்பிக்கையிலே!
பதிலளிநீக்குஎப்படி என் கவிதை?
இப்படி சொல்ல எவ்வளவு தில் வேணும்? இதை என் எழுத்து என்று சொன்னால் உதை தான் கிடைக்கும்...ஏதோ சினிமா பாட்டு சின்ன வயதில் கேட்டது.
நம்பள்கி.... யானையின் நம்பிக்கை
நீக்குஅதன் தும்பிக்கையாகத் தான் இருக்கும்....
யானை தன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறது... என்பது
இதிலிருந்தே தெரிகிறது.
(ஆமாம்... இதைச் சொல்ல ஏன் உதை கிடைக்கும்...?
நான் ஒரு ட்யுப் லைட். எதையும் லேட்டாகத்தான்
புரிந்து கொள்வேன்)
நன்றி நம்பள்கி.
என்றே நம்பிக் கைவைத்தால்
இமயம் கூட தொட்டிடலாம்!
உண்மையை உரைகும் உன்னத வரிகள்! கவிதை நம்பிக்கையின் ஊற்று!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி புலவர் ஐயா.
லிங்கம் மாமல்லனின் அன்பு வணக்கங்கள்..,
பதிலளிநீக்குதங்களுடைய நம்பிக்கை, என்ற தலைப்பில் பிறந்த கவிதை வரிகள் ஓவொன்றும் மிக அருமையாக உள்ளது என் கவிதை முயற்சிகளுக்கு இது புதிய வைட்டமின் பொதுவாக நல்லக் கவிதைகள் என்றால் கவிதைகள், நன்றாக தான் இருக்கும் ஆனல் அவைகள் உள்மனதில் உரையும் போது தான் உயிருக்கு உணவூட்டும் அதை உணர்கிறேன் தங்கள் கவிதைகளில் ...
-அன்பு சகோதரன் லிங்கம் மாமல்லன் -31/07/2013
நீக்குஅன்பு சகோதரர் லிங்கம் மாமல்லன் அவர்களுக்கு வணக்கம்.
“உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை!
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை“
-கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை.
இப்படிப்பட்டப் பெரியோர்களின் சொல்வழிகளில்
கவிதை எழுத முயற்சிக்கிறேன்.
கவிதைக்கலையில் நான் பெற்ற
பெருமைகள் யாவுமே
என் யாப்பிலக்கண ஆசிரியர்
கவிஞர் கி. பாரதி தாசன் அவர்களையே சேரும்!
உங்களின் முதல் வருகைக்கும்
தெளிவான கருத்திற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.
தமிழே !!
நீக்குகலைஞன் உன்னை சிலை வடிக்கிறான்
கவிஞன் உன்னை கவி பாடுகிறான்
தமிழை காதலித்தால் உயிரின் சுவை தெரியும்
கவிஞனின் படைப்பில் உண்மையின் தத்துவம் புரியும்
தொடர்ந்து தமிழ் கவிதை தாருங்கள் !!
அன்புச் சகோதரன் -மல்லன்
01/02/2013
சிறந்த தன்னம்பிக்கை கவிதைகள் | Life Success Motivational Quotes in Tamil
பதிலளிநீக்கு