பெருகிடுதே
ஆசைவெல்லம்
பெண்ணழகே என்செய்தாய்!
உருகிடுதே
அன்புநெஞ்சம்
உண்ணாமல் துவண்டேனே!
மருண்டிடுதே
மான்விழியோ
மனம்மயங்கிக் கிடந்தேனே!
விரும்பிடுதே
அழுதமொழி
வேண்டிடவும் தருவாயா?
கண்ணென்றும்!
மணியென்றும்!
கனியென்றும்! கலையென்றும்!
பண்ணென்றும்!
பாவென்றும்!
பாடுகின்ற குயிலென்றும்!
உண்ணென்றும்!
உணவென்றும்!
ஊட்டுகின்ற தாயென்றும்!
பெண்ணுன்னைப்
பாடவைத்துப்
பேதையாக்கி விட்டாயே!!
அருணா செல்வம்
/// கண்ணென்றும்! மணியென்றும்!
பதிலளிநீக்குகனியென்றும்! கலையென்றும்!
பண்ணென்றும்! பாவென்றும்!
பாடுகின்ற குயிலென்றும்!
உண்ணென்றும்! உணவென்றும்!
ஊட்டுகின்ற தாயென்றும்! ///
அருமை வரிகள்... நன்றி... பாராட்டுக்கள்...
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.
வே
பதிலளிநீக்குபதிவர் சந்திப்புகான ஏற்பாடுகள் செய்ய, வேலைமிக,இடையில் வர இயலவில்லை! கவிதையில் காதல் சோகம்கரைபுரண்ட வெள்ளமென ஓடுகிறது.
வணக்கம் புலவர் ஐயா.
நீக்குகாதல் சோகமும் கவிதையில் சுவையைத் தானே கொடுக்கும் ஐயா.
புரிதலுக்கு நன்றிங்க.
கண்ணென்றும்! மணியென்றும்!
பதிலளிநீக்குகனியென்றும்! கலையென்றும்!
பண்ணென்றும்! பாவென்றும்!
பாடுகின்ற குயிலென்றும்!
உண்ணென்றும்! உணவென்றும்!
ஊட்டுகின்ற தாயென்றும்!
பெண்ணுன்னைப் பாடவைத்துப்
பேதையாக்கி விட்டாயே!!
/////////////////////////////////
அழகாக செதுக்கள்......அழகிலும் அழகு
ஆமாம் சிட்டுக்குருவி...
நீக்குகல்லை வார்த்தையால் செதுக்க
கவிதை வந்துவிட்டதுங்க.
நன்றிங்க சிட்டுக்குருவி.
தங்கள் கவிதைகள் அனைத்தும்
பதிலளிநீக்குமிக மிக அருமை
தங்களைப் பாடவைக்கும் அந்தத்
தேவதைக்கு ( நிஜமாயினும் /கற்பனையாயினும்)
எங்கள் நன்றியினைச் சொல்லுங்கள்
நானும் அவளுக்கு உங்களுடன் சேர்ந்து நன்றி கூறுகிறேன் ஐயா.
நீக்குஉங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றிங்க ரமணி ஐயா.
அழகான வரிகள். அருமையான கவிதை. தொடருங்கள் தோழியே
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க தோழி.
நீக்கு// கண்ணென்றும்! மணியென்றும்!
பதிலளிநீக்குகனியென்றும்! கலையென்றும்!
பண்ணென்றும்! பாவென்றும்!
பாடுகின்ற குயிலென்றும்!
உண்ணென்றும்! உணவென்றும்!
ஊட்டுகின்ற தாயென்றும்!
பெண்ணுன்னைப் பாடவைத்துப்
பேதையாக்கி விட்டாயே
//
அழகான வரிகள் .. அருமை
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க நட்பே.
அருமையான காதல் கவிதை! சிறப்பு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க சுரேஷ் ஐயா.
மனதில் இனிக்கச் செய்யம்
பதிலளிநீக்குகரும்புக் கவிதை...
புசித்து சுவைத்தேன்...\
மீண்டும் விடுமுறை ஆரம்பம்..
கடந்த மூன்று நாட்கள் பயணத்தில் இருந்தேன் நண்பரே...
விடுமுறையை மனைவி மக்களுடன் நன்றாக
நீக்குகழித்துவிட்டு வாருங்கள் நண்பரே.
விடுமுறை நேரத்திலும் எனக்கு ஊக்கமளித்துப் பாராட்டியதற்கு
மிக்க நன்றிங்க நண்பரே.
எப்போதும்தானே பாடுறீங்க.இப்ப மட்டும் என்ன அலுப்பு.பேதையாய் பாடுவாய் நண்பா !
பதிலளிநீக்குஎன் இனிய தோழி ஹேமா...
நீக்குஇது அலுப்பு இல்லைங்க. காணாத கவலை. தேடுகிறேன்.
நன்றிங்க ஹேமா.
அழகிய எதுகைகள்
பதிலளிநீக்குதலையாய எதுகைகளில் பாட
ரூம் போட்டு சிந்திப்பீா்களா?
என்னென்பேன் ஏதென்பேன்
இனிக்கின்ற இக்கவியை
பொன்னென்போன் புகழ்என்பேன்
பூந்தமிழின் அருளென்பேன்
இன்னும்பல கவிஎழுத
இருகைகள் ஏந்திடுவேன்
அன்புநிறை நெஞ்சமுடன்
அருணாசெல்வம் பாடுகவே
தமிழ்ச்செல்வன் பிரான்சு
http://tamilselvane.blogspot.fr
mail: tamilselvane1990@gmail.com
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றிங்க தமிழ்ச்செல்வன் ஐயா.
நான் எழுதிய பாடல் “கலிவிருத்தம்” - நான்கு வரிகள். வரிக்கு நான்கு காய்ச்சீர் வரவேண்டும்.
உங்களின் கவிதை நன்றாக உள்ளது. ஆனால் அதில் “இன்னும்பல” அருணாசெல்வம்” இரண்டும் கனிச்சீராக வந்துள்ளது. கவனித்து எழுதுங்கள் ஐயா.
(ரூம்பெல்லாம் போட்டால் எனக்குத் துாக்கம் தான் வரும்)
CHO SWEET...
பதிலளிநீக்குநன்றிங்க கோவி சார்.
நீக்குஅற்புதமான வரிகள் மனதில் சம்மனமிட்டு அமர்ந்தன.
பதிலளிநீக்குநன்றிங்க சசிகலா.
நீக்குபடிக்கிறேன். நன்றிங்க.
பதிலளிநீக்குvaarthaikalaal
பதிலளிநீக்குoru maalai!
நன்றிங்க நண்பரே.
நீக்கு