செவ்வாய், 23 மே, 2023

நெடில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம் !

 


தந்ததானா தானான தந்த தானா தானான
தந்த தானா தானான தனதான (ஒரு கலைக்கு)
 
அன்பில் ஆழ்வார் வடிவோடு !
.

சிந்தைமேலே தீராமல் வந்த பாவோ தேனான
   செம்மை யோடே தேரேறி நடைபோடும் !
செம்பலாவாய் மாறாத வின்ப மோடு ரீங்காரம்
   தென்றல் போலே காதோரம் இசையாகும் !
 
தந்தையோனே நீங்காமல் என்னை நீயே சேயான
    தன்மை யோடே வாழ்நாளில் அருளேகு !
தங்கமாதாய் நீண்டோங்கு மின்ப வாழ்வே வானோடு
    தங்கும் மீனாய் நீந்தோடி மனமேவும் !
 
கந்தனாலே ஓங்காரம் கண்ட தாலே தீதான
   கந்தை யாகா வாழ்ந்தேற நலமாகும் !
கண்ணினாலே நேர்பார்வை யுன்ற தாலே தீராத
   கங்கை நீராய் ஆவோம்பு னிதமாக !
 
அந்தமானோன் தாராத துன்ப நோயே தீயாக
    அங்கம் மீதே போராடும் நிலையாகும் !
அன்புமீதே தேயாத எண்ண மானோர் மாயாத
    அன்பி லாழ்வார் வேலான வடிவோடு !
.
பாவலர் அருணா செல்வம்
23.05.2023

கருத்துகள் இல்லை: