வியாழன், 18 மே, 2023

நெடில் வல்லிசை அடுக்கிசை வண்ணம் !

 


 
தாத்தத் தத்தன தாத்தத் தத்தன
தாத்தத்தத் தன       தனதான     (ஒரு கலைக்கு)
 . 
மாற்றத்தைத் தர வழிகூறு !
 .
ஏட்டுச் சட்டமு மாக்கத் திட்டமு
   மேக்கத்தைத் தரு மலையாக !
  ஏட்டைச் சுட்டிய வாக்குச் சித்தமு
   மேற்றுக்கட் டிய வடிவாக !
 
கூட்டைக் கட்டிய காட்டுச் சிட்டது
   கூட்டிற்கொற் றிய குழுவாக !
  கூத்துக் கட்டிய நாட்டுக் குற்றது
   கூட்டத்தைப் பழி எனவாக !
 
மாட்டுக் கொட்டிலும் ஆட்டுத் தட்டிலை
   வாய்த்துப்பட் டவ னுயர்வாக !
  வாக்குச் சுத்தமு மூக்கத் தற்றது
   மாற்றத்தைத் தர வழிகூறு !
 
பாட்டுக் கற்றது கூட்டுச் சொற்களெ
   பார்த்துக்கட் டிய சரமோடு
  பார்த்துத் தட்டிய சேர்த்துச் சுட்டிய
   பாட்டிற்குற் றுனை இசையாகு !
.
பாவலர் அருணா செல்வம்
19.05.2023

கருத்துகள் இல்லை: