வியாழன், 7 மே, 2020

கோபப் படலாமோ!(வண்ணம் – 17)
.
தான தான தானான தானத் தனதானா
தான தான தானான தானத் தனதானா!
.
நாத னோடு மீதான மோகக் கனிவாலே
   நாண மோடு தீராத நாடிப் பொலிந்தாளே!
காத லோடு பாடாத கீதக் குறையாலே
   கான மேற நோயோடு பாடிப் பறந்தாளே!
சேத மாகி யேறாது மேனிக் குழைவாலே 
   சீவ னான பாவோடு கூடித் திரிவாயே!
மோத லோடு நாளோட வாழத் தகுமாமோ
   மூது சேர வீணான கோபப் படலாமோ?
.
பாவலர் அருணா செல்வம்
07.05.2020