புதன், 6 மே, 2020

உன் அருளைப் பெறுவேனே!(வண்ணம் – 16)
.
தந்ததன தந்ததனத்
தந்ததன தந்ததனத்
தந்ததன தந்ததனத் தனதானா  (அரையடிக்கு)
.
கந்தனெனு முன்னழகைத்
   தங்கமிகு வெண்நிலவைக்
   கண்நிறைய வெண்ணிவிடப் பொலியாதோ!
கங்குகரை யில்லையெனப்
   பொங்குபுக ழுந்திவரக்
   கண்டுநிக ரில்லையெனச் சுழலாதோ!
.
சிந்தையதை விஞ்சிவிடப்
   பின்னைவழி யென்னிதெனச்
   செம்மைவினை வந்தவழித் தெரியாதே!
சிந்தையது துன்பமிடத்
   தொண்டைவலி யெஞ்சிவரச்
   செங்கதிர னல்விளையச் சுடும்தீயே!
.
சொந்தமுயி றொன்றிவிடப்
   பந்தமதை மண்ணிலிடக்
   துன்பமிக வந்ததெனப் பெரும்நோயே!
சொன்னவழி யுன்னடியைக்
   கண்டுரைய நுண்ணுயிரைச்
   சுண்ணமென வென்றதனைக் களைவாயே!
.
சந்தவொலி மிஞ்சிவரப்
   பண்கருவை முந்திவிடத்
   தங்கமெனு மின்மொழியைப் பொழிவேனே!
சங்கமிடு முன்மனதைத்
   தங்கிவிடு மென்கவிதைச்
   சன்னமென உன்னருளைப் பெறுவேனே!
.
பாவலர் அருணா செல்வம்
06.05.2020
.
சுண்ணம்புழுதி 
சன்னம் - மேன்மை


கருத்துகள் இல்லை: