செவ்வாய், 5 மே, 2020

மயங்கினோம் உனது அன்பினாலே!(வண்ணம் – 15)
.
தனதனன தனந்த தானன தந்தனானா
தனதனன தனந்த தானன தந்தனானா!
.
கொடியவனை யடைந்து தீயது கொன்றதாலே
    குளிரொளிர நிறைந்து நீடிட நின்றவேலா!
கொடுமையொடு தொடர்ந்து நோயது நஞ்சினாலே
    குலமழிய நடுங்கி மோதிட வஞ்சினோமே!
கடலலையி லுறைந்து கோபுரங் கொண்டதாலே
    கரமிணைய வணங்கி னோமுயர் சண்முகாவே!
உடனழிவு மறைந்து பேரொளி வந்ததாலே
    உடலுருகி மயங்கி னோமுன தன்பினாலே!
.
பாவலர் அருணா செல்வம்
05.05.2020