ஞாயிறு, 3 மே, 2020

வேறொருவர் எங்கே?(வண்ணம்)
.
தானனன தானனன தானனன தந்தா
தானனன தானனன தானனன தந்தா!
.
ஆறுதலை யோடொளிரு மாரமுத மென்றே
   ஆதியுரு வானவரு ளோதுகிற கந்தா!
சீறுகிற நாகுருவ மேயெதிரி லின்றே
   சேருகிற நோயுலகி லேஉயரு திங்கே!
ஏறுமயி லேறிவர நோயழியு மென்றே
   ஏவுகிற வேலைமனம் நாடிடுது நன்றே!
மாறுவழி வேளைவர நீயொருவ னன்றே
   மாவினைக ளோடவிட வேறொருவ ரெங்கே?
.
பாவலர் அருணா செல்வம்
03.05.2020