திங்கள், 25 மே, 2020

இடையொழுகற்றூங்கிசை வண்ணம்நெஞ்சுள் குறைவேது?
.
தய்யன தனன தந்த
தய்யன தனன தந்த தனதான!
.
துள்ளிடும் பருவங் கண்டு
   தொல்லையில் விலகி நின்ற மனமேது?
கள்ளெனும் மொழியை நெஞ்சம்
   கவ்விடும் நிலைம றந்த இனமேது?
கிள்ளையின் குரலின் மென்மை
   எவ்விணை உலகி லென்ற நிறைவேது?
வள்ளியு ளுறையுங் கந்தன்
   வல்லமை யறிந்த நெஞ்சுள் குறையேது?
.
பாவலர் அருணா செல்வம்
25.05.2020