திங்கள், 18 மே, 2020

நெடில் ஒழுகல் தூங்கிசை வண்ணம்பழனி மலைவாசா!
.
தானன தனன தானன தனன
தானன தனன --- தனதானா (அரையடிக்கு)
.
சேவலும் மயிலும் வேலுட னழகும்
   சேருயர் பழனி சிவபாலா!
   சேவடி நிழலின் வாசலை வணங்க
   சீவனம் வழங்கும் கதிர்வேலா!

காவடி யழகு மாடலி னெழிலும்
   கானமு மொழுகும் மலைமீதே
   காணிட நினைந்து காதலை நிறைந்து
   காவலி றையுனை யடைந்தோமே!

பாவன லுலகில் நோயெனுந் துயரம்
   பாதகம் புரியும் நிலையேனோ?
   பாதக மனதில் பாவங்க ளிருந்தும்
   பாதையி ளொளியை யருள்வாயே !

ஆவன வெதிலும் வேதனை மறைய
   ஆகிட விரையு மழகாலே
   ஆவலி லெழுதி ஞாலமு முணர
   ஆடிய நிலையில் தருவேனே!
.
பாவலர் அருணா செல்வம்
18.05.2020