சனி, 16 மே, 2020

மெலி அகவல் தூங்கிசை வண்ணம்அருங்கவி பொழிவோமே!
.
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
தனந்தன தனந்தன ------தனதானா  
.
நெடுங்கட லிறைந்திட
   வரைந்தன வலைந்திட
   நிறைந்தொளி யடர்ந்திட யுறைவோனே!
நிதம்தரும் வரங்களும்
   நலந்தரும் சுகங்களும்
   நிரம்பிட வழங்கிடும் மணியோனே!
.
கொடுந்தொழில் முனைந்திட
   மலிந்திடும் செயல்களின்
   கொடும்பயம் மறந்தன ருலகோரே!
குவிந்திடும் பெருஞ்சுமை
   சிதைந்திடும் மனங்களின்
   குணங்குறி யறிந்திட விழைந்தாயோ!
.
இடுங்கன லணைந்திடும்
   கடும்புயல் மறைந்திடு
   மிருந்திட வளர்ந்திடும் கொரொனாவோ!
இருந்தடம் மறைந்துயி
   ரொடுங்கியும் பிடுங்கியு
   மிடும்பினை நடுங்கிட யழுதோமே!
.
பிடுங்கிடு பெருந்துய
   ரெரிந்திடு கடும்வினை
   பெரும்புகழ் புரிந்திட வருவாயே!
பெருந்தமிழ் நிறைந்திடும்
   தரும்நிலை பொருந்தியும்
   பெரும்பொழி லருங்கவி பொழிவோமே!
.
பாவலர் அருணா செல்வம்
16.05.2020

கருத்துகள் இல்லை: