புதன், 13 மே, 2020

நெடில் அகவல் தூங்கிசை வண்ணம்!
வேதனை விலகி ஓடாதோ!
.
தானன தனன தானன தான
தானன தனன --- தானானா (அரையடிக்கு)
.
காலையி லெழுந்த ஊடலி லான
  காதலை மறந்து போனானே!
  காயம னமிக மோதிய தான
  காரிகை தனிமை யானாளே!
.
சோலையி லழகு பூவினி லூறும்
  தூவிட மணமு மாடாதோ!
  சூடிடும் பொழுதி லூறிடு மாறு
  சூசன மனதி லோடாதோ!
.
வேலையி லொழுகி மூடிய நேரம்
  வேசடை நினைவி லோடாதோ!
  வேயலு டலினை ஏறிடும் போது
  வேதனை விலகி யோடாதோ!
.
மாலையி லழகு மாலைக ளோடு
  மாவிழி வினிமை யோதாதோ!
  மாதவ ளடையும் கூடலின் மோகம்
  மாதவன் மனதில் மோதாதோ!
.
பாவலர் அருணா செல்வம்
13.05.2020

சூசனம்சமிஞ்சை, அறிவித்தல்
வேசடைகவலை, துக்கம்